மார்ச் 20, சித்தோடு (Erode News): சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல ரௌடி ஜான், நேற்று தனது மனைவியுடன் காரில் திருப்பூர் நோக்கி பயணம் செய்தபோது, 10 பேர் கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இந்த விஷயத்தில் நேற்று 4 பேர் கும்பல் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 3 பேர் மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது. ஜான் கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து நடந்த விசாரணையில், பழிக்குப்பழியாக கொலை நடந்தது தெரியவந்தது. அதாவது, சேலத்தை சேர்ந்த ரவுடி செல்லத்துரையின் கொலை வழக்கில் தொடர்புடைய ஜானை, பழிக்குப்பழியாக கொலை செய்தது தெரியவந்தது. இந்த விஷயம் குறித்து தொடர் விசாரணை நடந்து வருகிறது. இன்று 2 பேர் சேலம் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நேரில் வந்து சரண் அடைந்தனர். இதனிடையே, கொலையை வேறொரு காரில் சென்ற பெண் எடுத்த வீடியோ வெளியாகியுள்ளது. கார் விபத்தில் சிக்கியதுபோல தோற்றமளித்ததால், பெண் விபத்து என நினைத்து வீடியோ பதிவு செய்தார். பின் அது கொலை சம்பவம் என உணர்ந்து, பெண் காரில் இருந்தபடி அழுத்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. TN Govt Job: அரசுப்பேருந்து ஓட்டுநர் & நடத்துனர் வேலை; விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரம் இதோ.!
ரவுடி கொலை செய்யப்படுவது தெரியாமல், காரில் சென்ற பெண் விபத்து என பதிவு செய்த காணொளி:
என்னதான் நடக்குது தமிழகத்தில் @CMOTamilnadu @mkstalin நேற்று நெல்லை.!
இன்று ஈரோடு.!!
பதைபதைக்கும் காட்சி.!#கொலைக்களம் pic.twitter.com/AApal0LbYp
— SudhamaniBJP (@sudhamanibjp) March 19, 2025
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)