Kanchipuram Fire Accident: மறுஉத்தரவு வரும் வரையில் காஞ்சிபுரத்தில் பட்டாசு ஆலை செயல்பாடுகளை நிறுத்த உத்தரவு - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!
9 பேரின் உயிரை பட்டாசு ஆலை பலிகொண்ட நிலையில், மேற்படி அசம்பாவிதம் ஏற்படுவதை தவிர்க்க மாவட்டத்தில் உள்ள பிற பட்டாசுகளை ஆலைகளில் பணிகளை நிறுத்த காஞ்சிபுரத்தில் உத்தரவிடப்பட்டுள்ளது.
மார்ச் 23, ஆட்சியர் அலுவலகம் (Kanchipuram News): காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குருவிமலை கிராமத்தில் இருக்கும் பட்டாசு ஆலையில், பட்டாசு தயாரிப்பின் போது பயங்கர (Kanchipuram Fire Accident) வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பட்டாசு ஆலை மற்றும் குடோன் வெடித்து சிதறி, 9 பேர் நிகழ்விடத்திலேயே பலியாகினர். 19 பேர் படுகாயத்துடன் மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாநில அரசின் சார்பில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.3 இலட்சம், காயமடைந்தோருக்கு ரூ.1 இலட்சம் நிதிஉதவி அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் சார்பில் ரூ.2 இலட்சம் நிதிஉதவி வழங்கப்பட்டது. இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குடோன்கள், பட்டாசு தயாரிப்பு ஆலை மறுஉத்தரவு வரும் வரையில் செயல்பட கூடாது என மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி உத்தரவிட்டுள்ளார். IndiGO Complaint: மதுபோதையில் விமான பணியாளர்களுடன் தகராறு; 2 பயணிகள் மீது வழக்குப்பதிவு.. மும்பை விமான நிலையத்தில் பரபரப்பு.!