செப்டம்பர் 13, கோவை (Coimbatore News): கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள பல்வேறு கல்லூரிகளிலும் ஓணம் (Onam) பண்டிகை கடந்த சில நாட்களாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை நவக்கரை பகுதியில் அமைந்துள்ள ஏஜேகே கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் விமரிசையாக நடைபெற்றது. மாணவர்கள் பாரம்பரிய உடையில் கலந்துகொண்டனர். அப்போது மகாபலி மன்னன் வேடமிட்டவர் ஹெலிகாப்டரில் வந்திறங்கிய நிகழ்வு மாணவர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. பின்னர் கேரள பாரம்பரிய சிங்காரி மேள வாத்தியங்களுடன் மகாபலி மன்னன் மாணவர்களுடன் ஆடினார். மேலும் உற்சாகமாக ஓணம் பாடல்களை பாடி மகிழ்ந்தனர். TN Weather Update: "அடுத்த 2 நாட்களுக்கு வெயில் அசௌகரியம்" - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)