நவம்பர் 14, பொம்மிக்குப்பம் (Vellore News): திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பொம்மிடிக்குப்பம் பகுதியில், அரசுப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் சத்துணவு அமைப்பாளராக பத்மினி என்பவர் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வரும் சிறுவன் சத்துணவில் முட்டை வாங்கச் சென்றபோது, அவரை சாதி ரீதியாக பேசி பத்மினி திட்டியதாக தெரியவருகிறது. இதனால் பாதிக்கப்பட்ட சிறுவன் தனது சகோதரரிடம் கூறியபோது, அவர் கேட்டபோதும் சாதி குறித்து அவதூறாக பேசியதாக சொல்லப்படுகிறது. இதனால் சத்துணவு அமைப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. Pregnancy Tips: மகப்பேறு காலங்களில் மரணம் ஏன்? மருத்துவரின் விளக்கம்..!
7ம் வகுப்பு மாணவர் தெரிவித்த குற்றச்சாட்டு தொடர்பான காணொளி:
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)