Fire Crackers Factory Blast: சாத்தூரில் சோகம்: பட்டாசு ஆலை வெடித்து, தொழிலாளி பரிதாப பலி.!
சிவகாசி மற்றும் அதனை சுற்றிள்ள விருதுநகர் மாவட்ட பகுதிகளில் பிரதான கைத்தொழிலாளாகவும், முக்கிய தொழில் கட்டமைப்பாகவும் பட்டாசு ஆலை இருந்து வருகிறது. இதனால் இலட்சக்கணக்கான மக்கள் பலன் பெறுகிறார்கள். ஆனால், ஆபத்தும் அதிகம்.
டிசம்பர் 14, விருதுநகர் (Virudhunagar News): விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பிரதமானமாக பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இதனை நம்பி அம்மாவட்ட மக்களின் பிழைப்பு என்பது இருக்கிறது. அவ்வப்போது பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்துகளும் நிகழும். இந்நிலையில், இன்று விருதுநகர் சாத்தூர், பனையபட்டி பகுதியில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில், பட்டாசு ஆலை தொழிலாளி சண்முகராஜ் (வயது 38) என்பவர் உயிரிழந்துள்ளார். இவர் அங்குள்ள கண்டியாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆவார். தீயணைப்பு படையினர் சண்முகராஜின் உடலை மீட்டதைத்தொடர்த்து, காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Tirupattur Shocker: வேனின் சக்கரத்தில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை பரிதாப பலி: வீட்டு வாசலில், தாயின் கண்முன் நடந்த சோகம்.!
என்றுதான் தீருமோ இந்த சோகம்?..
விருதுநகர் மாவட்டம் சாத்தூர், பனையபட்டி தனியார் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் கண்டியாபுரம் பகுதியைச் சேர்ந்த தொழிலாளி சண்முகராஜ் (38) என்பவர் உயிரிழப்பு.. @latestly | #LatestLYTamil | #Virudhunagar pic.twitter.com/8p4ve2Jifv
— Sriramrpckanna (@Sriramrpckanna1) December 15, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 15, 2023 10:08 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

