India Vs Pakistan Asia Cup 2025 | Suryakumar Yadav (Photo Credit : @mufaddal_vohra / @BCCI X)

செப்டம்பர் 22, துபாய் (Sports News): ஆசியக்கோப்பை 2025 (Asia Cup 2025) தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியா உட்பட 8 நாடுகள் கிரிக்கெட் விளையாட்டில் மோதிக்கொள்கின்றன. 19 போட்டிகள் கொண்ட ஆட்டத்தில் நேற்று 14வது ஆட்டம் நடந்து முடிந்தது. கடந்த செப்டம்பர் 14ம் தேதி இந்தியா - பாகிஸ்தான் (India - Pakistan Cricket Match) இடையே நடைபெற்ற போட்டியில், இறுதியில் இந்திய தேசிய கிரிக்கெட் அணி திரில் வெற்றி அடைந்தது. அதனைத்தொடர்ந்து, நேற்று இரண்டாவது முறையாக இந்தியா Vs பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி பௌலிங்கை தேர்வு செய்தது. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பேட்டிங் செய்தது.

இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணி (India National Cricket Team Vs Pakistan National Cricket Team):

பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்திருந்தது. 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணி நிதானத்துடன் ரன்கள் குவிப்பில் ஈடுபட்டது. இந்திய அணியின் சார்பில் முதலில் களமிறங்கிய அபிஷேக் ஷர்மா (Abhishek Sharma) பந்துகளில் ரன்கள் குவித்திருந்தார். ஷுப்மன் கில் 27 பந்துகளில் 47 ரன்கள் விளாசி அசத்தி இருந்தார். இருவரும் சேர்ந்து 100 ரன்களுக்கு மேல் குவித்தது மிகப்பெரிய அளவில் கவனத்தை பெற்றது. இவர்கள் இருவரும் சேர்ந்து 9.4 ஓவர் வரையில் எந்த விக்கெட்டையும் இழக்காமல் 105 ரன்கள் சேகரித்தனர். மூன்றாவதாக அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் களமிறங்கினார். அவர் 3 பந்துகளில் ரன்கள் ஏதும் எடுக்காமல் ஹாரிஸ் ரவுபின் பந்தில் அப்ரார் அகமத்திடம் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். பின் திலக் வர்மா களமிறங்கினார். IND Vs PAK Asia Cup 2025: மாஸ் வெற்றி! இந்தியா - பாகிஸ்தான் ஆசியக்கோப்பை 2025 போட்டியில் அசத்தல்.! மாயாஜாலம் செய்த இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள்.! 

ரன்கள் குவிப்பில் அதிரடி காட்டி வெற்றி வாகை சூடிய இந்திய கிரிக்கெட் அணி :

களத்தில் திலக் வர்மா, சஞ்சு சாம்சன் நின்று ஆடி ரன்களை நிதானமாக உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் சஞ்சு சாம்சன் 17 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து ஹாரிஸின் பந்துகளில் போல்ட் அவுட் ஆகினார். இந்திய அணி 4 விக்கெட் இழந்து இருந்தது. திலக் வர்மா 19 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தனர். ஹர்திக் பாண்டியா 7 பந்துகளில் 7 ரன்கள் எடுத்தனர். இறுதியில் இந்திய கிரிக்கெட் அணி 18.5 வது ஓவரில்174 ரன்கள் எடுத்து அசத்தல் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மீண்டும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது.

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் சூரியகுமார் யாதவ் பேட்டி :

இந்நிலையில் போட்டியில் வெற்றி பெற்றதும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் (Suryakumar Yadav) செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்த அவர் ரைவேல்ரி போட்டி (Rivalry Match) குறித்த விஷயத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேசினார். இது தொடர்பாக அவர் பேசுவையில், "இந்தியா - பாகிஸ்தான் போட்டியை Rivalry என கூற வேண்டாம். இரண்டு அணிகளும் 20 ஆட்டங்களில் விளையாடி அதில் 7-8 போட்டிகளில் வெற்றி என்ற தன்மையுடன் போட்டியிட்டு விறுவிறுப்புடன் ஆட்டம் நடைபெற்று வந்தால் அது ரைவேல்ரி போட்டி என்று கூறலாம். ஆசிய கோப்பை கிரிக்கெட் பொறுத்தவரையில் 10-1 க்கு 10-0 என்ற விஷயத்தில் இருப்பது எப்படி ரைவேல்ரி போட்டியாக இருக்கும். இனிமேல் இது ரைவேல்ரி போட்டி கிடையாது (India vs Pakistan Not A Rivalry Anymore) என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், பும்ரா போன்ற மூத்த விளையாட்டு வீரர்களுக்கும் ஒரு சில நேரம் அடி சறுக்கும். சிவம் துபே போன்ற வீரர் அதனை சரியாகப் புரிந்து கொண்டு செயல்பட்டதால் இந்திய அணியின் வெற்றி வசமானது" என தெரிவித்தார்.

சூரியகுமார் யாதவ் பேட்டி :