LSG Coach Justin Langer: ஐபிஎல் கிரிக்கெட்டுடன் ஒலிம்பிகை ஒப்பிட்ட லக்னோ அணியின் பயிற்சியாளர்; அணியுடன் இணைய காத்திருப்பதாக பேச்சு.!

கடந்த 2023 கோப்பையை சிஎஸ்கே போராடி பெற்றதைத்தொடர்ந்து, நடப்பு ஆண்டு கோப்பை யார்? வசம் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Lucknow Super Giants | Justin Langer (Photo Credit: Wikipedia)

டிசம்பர் 31, புதுடெல்லி (Sports News): ஐபிஎல் 2024 (IPL 2024) போட்டித்தொடர் மார்ச் மாதம் 23ம் தேதி தொடங்கி, மே மாதம் 29ம் தேதி நடைபெறவுள்ளது. 10 அணிகள் மோதிக்கொள்ளும் இந்திய அளவிலான போட்டியில், அணியின் வீரர்கள் ஏற்கனவே ஏலத்தில் தேர்வு செய்யப்பட்டுவிட்டன. ஒவ்வொரு அணியும் தங்களின் வீரர்கள், பயிற்சியாளர்களை விரைவில் இந்தியா அழைத்து வந்து பயிற்சி அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்: கடந்த 2022ம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் இருந்து இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் (Lucknow Super Giants) அணி அறிமுகம் செய்யப்பட்டது. நடப்பு ஆண்டின் ஐபிஎல் தொடரிலும் லக்னோ அணி காலம்காண்கிறது. கடந்த 2022, 2023 போட்டியில் லக்னோ அணி புள்ளிப்பட்டியலின்படி மூன்றாவது இடத்திலும் இருந்தது. Thalapathy 68 Update: இன்று மாலை வெளியாகிறது தளபதி 68 படத்தின் முக்கிய அப்டேட்; விபரம் உள்ளே..! 

ஜஸ்டின் லாங்கர்: எதிர்வரும் ஐபிஎல் 2024 போட்டியில் லக்னோ அணியை கேப்டனாக கே.எல் ராகுல் (KL Rahul) வழிநடத்துகிறார். அணியின் பயிற்சியாளராக ஜஸ்டின் லாங்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆவார். இந்நிலையில், லாங்கர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை, ஒலிம்பிக்குடன் ஒப்பிட்டு பேசி இருக்கிறார்.

ஒலிம்பிக்குடன் ஒப்பீடு: 53 வயதாகும் ஜஸ்டின் கிரிக்கெட்டில் அனுபவம் கொண்ட வீரர் ஆவார். இதனால் அவருக்கு லக்னோ அணியில் பயிற்சியாளராக வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. விரைவில் அணியுடன் இணைந்து பணியாற்ற தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ள அவர், தனது பல்வேறு அனுபவங்கள் குறித்து பேசினார். மேலும், அணியுடன் இணைந்து பணியாற்றும் நாளுக்காக தான் காத்திருப்பதாகவும், உலகளவில் ஒவ்வொரு ஆட்டத்தையும் மில்லியன் கணக்கானோர் கவனிப்பது மகிழ்ச்சியை தருகிறது. ஐபிஎல் போட்டி என்பது ஒலிம்பிகை போன்றது என கூறினார்.