Smriti Mandhana: 27 பந்துகளில் 50 ரன்கள்.. பேட்டிங்கில் அசத்திய ஸ்மிருதி மந்தனா.! மகளிர் பிரீமியர் லீக் ஆர்.சி.பி சாதனை.!

2025 பெண்கள் பிரீமியர் லீக் தொடரில், பெங்களூர் அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா, முதல் முறையாக 50 ரன்களை கடந்து அசத்தல் பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.

Smriti Mandhana: 27 பந்துகளில் 50 ரன்கள்.. பேட்டிங்கில் அசத்திய ஸ்மிருதி மந்தனா.! மகளிர் பிரீமியர் லீக் ஆர்.சி.பி சாதனை.!
Smriti Mandhana (Photo Credit: @wplt20 X)

பிப்ரவரி 17, வதோதரா (Sports News): மூன்றாவது டாடா பெண்கள் பிரீமியர் லீக் (TATA Women's Premier League 2025) போட்டிகளில், நான்காவது ஆட்டம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - டெல்லி கேபிட்டல்ஸ் (RCB Vs DC WPL 2025) அணிகள் இடையே நடைபெற்று வருகிறது. முதலில் டாஸ் வென்று பெங்களூர் அணி பவுலிங் தேர்வு செய்ததைத்தொடர்ந்து, டெல்லி அணி பேட்டிங் செய்தது. 19.3 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டையும் இழந்த டெல்லி அணி, 141 ரன்கள் சேகரித்தது. இதனால் 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி மறுமுனையில் களமிறங்கியது. Renuka Singh Takes Shafali Verma Wicket: முதல் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறிய ஷபலி வர்மா; பந்துவீச்சில் அசத்திய ரேணுகா சிங்.!

அரை சதம் கடந்த ஸ்மிருதி மந்தனா:

தொடக்கம் முதலாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பெங்களூர் அணி, தொடர்ந்து வெற்றியை நோக்கி பயணம் செய்தது. பெங்களூர் அணியின் சார்பில் விளையாடிய கேப்டன் ஸ்மிருதி மந்தனா 27 பந்துகளில் 50 ரன்கள் அடித்து அசத்தினார். அவர் தொடர்ந்து அணியின் வெற்றிக்காக விளையாடி வருகிறார். 14.3 ஓவர்களில் பெங்களூர் அணி 133 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஸ்மிருத்தி 46 பந்துகளில் 81 ரன்கள் குவித்துள்ளார். இதன் வாயிலாக அவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் அதிக ரன்கள் சேர்ந்த வீராங்கனைகள் பட்டியலில் முதல் இடத்தை பெற்றுள்ளார். மேலும், அவர் நடப்பு சீசனில் முதல் அரை சத்தத்தை கடந்து இருக்கிறார்.

ஸ்மிருதி மந்தனா 50 ரன்கள் அடித்து அசத்தல்:

50 ரன்களை கடந்து அசத்திய ஸ்மிருதி:

வதோதரா கிரிக்கெட் ரசிகர்களை அகிலவைத்த ஸ்மிருதி:

(The above story first appeared on LatestLY on Feb 17, 2025 10:35 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).