நவம்பர் 20, அகமதாபாத் (Sports News): 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின், 13வது உலகக்கோப்பை போட்டிகள் நேற்றுடன் கோலாகலமாக நிறைவு பெற்றது. இறுதிப்போட்டியில் களம்கண்ட இந்தியா - ஆஸ்திரேலியா அணியின் வீரர்கள் சிறப்பாக விளையாடி இருந்தனர்.

போட்டியின் இறுதியில் இந்தியா நிர்ணயித்த 241 ரன்கள் இலக்கை எட்டிய ஆஸ்திரேலிய அணி, உலகக்கோப்பை 2023-ஐ பெற்றுக்கொண்டு தனது நாட்டிற்கு பயணிக்கிறது. இந்தியா நடப்பு உலகக்கோப்பையில் இறுதியில் முதல் தோல்வியை கண்டு, ரன்னர் அப் ஆனது. 2 Killed Gun Fire in Bihar: காதல் விவகாரத்தில் குடும்பத்தினர் மீது சரமாரி துப்பாக்கிசூடு: ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் பலி., 4 பேர் படுகாயம்.! 

Virat Kohli (Photo Credit: X)

இந்தியாவின் சார்பில் விளையாடியவர்களில் விராட் கோஹ்லி, ரோஹித் சர்மா, கே.எல் ராகுல் ஆகியோர் சிறப்பாக விளையாடினார். ஆசி., அணியின் சார்பில் விளையாடிய டார்விஸ் ஹெட் 100 ரன்களை கடந்து கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்தார். Open AI CEO: ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி யார்?.. எம்மட் ஷேர் பொறுப்பேற்க வாய்ப்பு?..! 

ஆட்டத்தின் முடிவில் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 2023 ஆட்ட நாயகனாக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டார். ஆஸி., அணியின் வீரர் டார்விஸ் ஹெட் நேற்றைய போட்டியின் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

போட்டி நிறைவுபெற்றதும் ஆஸி., அணியிடம் கோப்பை ஒப்படைக்கப்பட்டது. அதனை தங்களுடன் எடுத்துச்சென்ற ஆஸி., வீரர்களில் மிச்சேல் மார்ஷ் (Mitchell Marsh) தனது கால்களை தூக்கி அதன் மீது வைத்து பீர் அருந்தினார். இதுகுறித்த போட்டோ வெளியாகி கண்டனத்தை பெற்று வருகிறது.

ICC CWC 2023 Final | Team India Dressing Room (Photo Credit: Instagram)

அதேவேளையில், இந்திய அணியின் விராட் கோஹ்லி (Virat Kohli), நடப்பு தொடருக்கான ஆட்ட நாயகன் விருதை பெற்று தன்னுடன் பத்திரமாக வைத்துக்கொண்டார். உடைமாற்றும் அறையில் இந்திய அணியின் வீரர்கள் கருத்துக்களை பரிமாறியபின், ரவீந்திர ஜடேஜாவின் கையால் விராட்க்கு தங்கப்பதக்கமும் வழங்கப்பட்டது.

மிட்செல்லின் சர்ச்சை செயல்:

உடை மாற்றும் அறையில் இந்திய அணி: 

 

View this post on Instagram

 

A post shared by Team India (@indiancricketteam)

 

2027 ஒருநாள் கிரிக்கெட் தொடர் உலகக்கோப்பையை வெல்வோம்.