Jewellery Theft: தலைமை ஆசிரியர் வீட்டில் 100 பவுன் நகை திருட்டு.. கொள்ளையர்கள் அட்டூழியம்..!
திண்டுக்கல்லில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அக்டோபர் 03, திண்டுக்கல் (Dindigul News): திண்டுக்கல் மாவட்டம், முருகபவனம் அடுத்துள்ள நாயனார் முகமது தெருவில் வசித்து வருபவர் சவரிமுத்து. இவர், திண்டுக்கல் அருகே உள்ள ரெட்டியார் சத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியராக (School Headmaster)பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஸ்டெல்லா ராணி ஜம்புலியம்பட்டியிலுள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். இவர்களது மகள் திருமணம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இவர்கள் தங்களது மகள் திருமணத்திற்காக வீட்டில் 100 பவுன் நகை வாங்கி பீரோவில் வைத்துள்ளனர். மகளின் திருமணத்திற்கு துணி எடுப்பதற்காக திருச்சிக்கு குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளனர். TN Weather Update: இடி, மின்னலுடன் வெளுக்கப்போகும் கனமழை.. நாளைய வானிலை அப்டேட்: சென்னை வானிலை ஆய்வு மையம்..!
திருமணத்திற்கு துணி எடுத்து முடித்துவிட்டு, நள்ளிரவு வீடு திரும்பியபோது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு சவரிமுத்து அதிர்ச்சியடைந்தார். பின்னர், வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 100 பவுன் நகையும் (Jewellery) ரூ. 20 ஆயிரம் பணமும் கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து, திண்டுக்கல் தாலுகா காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.
புகாரின்பேரில், காவல்துறையினர் விரைந்து வந்து கைரேகை நிபுணர்களை வரவழைத்து குற்றவாளிகளின் கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து பார்த்ததில் 2 இரு சக்கர வாகனத்தில் வந்த 4 பேர் வீட்டின் உள்ளே செல்வது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
(The above story first appeared on LatestLY on Oct 03, 2024 04:40 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

