Bus-Lorry Collision On Trichy-Chennai Highway: திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பஸ்ஸை நொறுக்கி விட்டு ஓடிய லாரி டிரைவர்.. 2 பேர் பலி.. 12 பேர் காயம்..!
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பஸ் மற்றும் லாரி மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
ஏப்ரல் 02, திருச்சி (Trichy): சென்னையில் இருந்து கம்பம் நோக்கி தனியார் ஆம்னி பேருந்தானது 34 பயணிகளுடன் சென்றுள்ளது. அப்போது திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் (Trichy-Chennai Highway) பேருந்தானது லாரியை முந்தி செல்ல முயன்றுள்ளது. அதில் லாரி மற்றும் பஸ் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது (Bus-Lorry Collision). இதில் பேருந்தின் முன் பக்கம் முற்றிலும் நொறுங்கியது. அதில் பேருந்து டிரைவர் மற்றும் முன் பக்கம் அமர்ந்திருந்த ஒரு பாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பேருந்தில் உறங்கி கொண்டிருந்த 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். Women Dancer Abused: குடிபோதையில் பெண் நடன கலைஞரிடம் வம்பிழுத்த ஆசாமி; பதிலுக்கு பதில் வாக்குவாதத்தால் ரகளை.!
இந்த விபத்து தொடர்பாக அக்கம்பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்து நேர்ந்தவுடன் லாரி டிரைவர் அங்கிருந்து ஓடியது குறிப்பிடத்தக்கது.
(The above story first appeared on LatestLY on Apr 02, 2024 10:42 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

