கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் ஆத்திரம்.. நண்பர் அதிர்ச்சி செயல்..!

செங்கல்பட்டில் கடனை திருப்பி கேட்டதால் நண்பர் மீது கார் ஏற்றி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் ஆத்திரம்.. நண்பர் அதிர்ச்சி செயல்..!
Chengalpattu Murder Case (Photo Credit: YouTube)

ஏப்ரல் 17, மதுராந்தகம் (Chengalpattu News): செங்கல்பட்டு மாவட்டம், படாளம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரத்பாபு (வயது 45). இவர், மின் வாரிய ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார். மங்கலம், பள்ளிக்கூடத் தெருவைச் சேர்ந்த சிவராஜ் (வயது 30), தனியார் நிறுவன ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் இருவரும் நண்பர்கள் ஆவர். காதல் மனைவியிடம் ஜாதியைச்சொல்லி வம்பு.. கணவனுக்கு ஆப்பு வைத்த சம்பவம்.!

நண்பர் கொலை:

இந்நிலையில், நேற்று முன்தினம் (ஏப்ரல் 15) இரவு சரத்பாபு, அவரது வீட்டின் அருகே நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, சிவராஜ் தன் காரை வேகமாக ஓட்டி வந்து, சரத்பாபு மீது பயங்கரமாக மோதினார். இதில் படுகாயமடைந்த சரத்பாபுவை மீட்ட அக்கம்பக்கத்தினர், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

போலீஸ் விசாரணை:

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த படாளம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும், சிவராஜை கைது செய்து, காரையும் பறிமுதல் செய்துள்ளனர். விசாரணையில், சிவராஜுக்கு, சில ஆண்டுகளுக்கு முன் சரத்பாபு 4 லட்சம் ரூபாய் கடன் கொடுத்துள்ளார். ஆரம்பத்தில் முறையாக வட்டி செலுத்தி வந்த சிவராஜ், கடந்த சில மாதங்களாக வட்டி கொடுக்கவில்லை. இதனால், கொடுத்த பணத்தை சரத்பாபு திருப்பி கேட்டுள்ளார். ஆத்திரமடைந்த சிவராஜ், சரத்பாபு மீது காரை ஏற்றி கொலை (Murder) செய்துள்ளது தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(The above story first appeared on LatestLY on Apr 17, 2025 11:32 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).