Minor Girl Forced Into Prostitution: 17 வயது சிறுமி விபச்சாரத்தில் தள்ளப்பட்ட சம்பவம்; சினிமா ஆசை காட்டி ஏமாற்றிய பெண் தரகர் கைது..!

சினிமா ஆசை காட்டி பெண் தரகர் ஒருவர் 17 வயது சிறுமியை விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Minor Girl Forced Into Prostitution: 17 வயது சிறுமி விபச்சாரத்தில் தள்ளப்பட்ட சம்பவம்; சினிமா ஆசை காட்டி ஏமாற்றிய பெண் தரகர் கைது..!
RAPE FILE PIC (PHOTO CREDIT: PIXABAY)

ஏப்ரல் 05, சென்னை (Chennai News): சென்னையில் உள்ள நங்கநல்லூர் தில்லை கங்கா நகர் பகுதியில் விபச்சாரம் நடப்பதாக, ரகசிய தகவல் ஒன்று விபச்சார தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு கிடைத்தது. இதன்பேரில், அங்கு சென்ற விபச்சார தடுப்பு பிரிவு காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அதில், 17 வயது சிறுமி விபச்சாரத்தில் தள்ளப்பட்டது தெரியவந்துள்ளது. Cucumber Masala Roti: சுவைமிக்க வெள்ளரிக்காய் மசாலா ரொட்டி செய்வது எப்படி..? – விவரம் உள்ளே..!

இதனையடுத்து, விபச்சார தடுப்பு பிரிவு காவல்துறையினர் அந்த சிறுமியை விசாரித்துள்ளனர். அதில், சிறுமிக்கு சினிமா ஆசை காட்டி (Female Broker Aressted) 56 வயது பெண் தரகர் ஒருவர் சென்னைக்கு அழைத்து வந்து, விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளது விசாரணையில் தெரியவந்தது. பிறகு, அந்த சிறுமியை பத்திரமாக மீட்டு, அரசு காப்பகத்தில் சேர்த்தனர். மேலும், சிறுமியை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய அந்த பெண் தரகர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

(The above story first appeared on LatestLY on Apr 05, 2024 03:01 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).