Mother Suicide After Killing Two Children: கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு; 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை..!
சேலத்தில் கணவனுடன் ஏற்பட்ட தகராறில், அவரது மனைவி தனது இரு குழந்தைகளையும் கொன்றுவிட்டு, தானும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மே 25, இடைப்பாடி (Salem News): சேலம் மாவட்டத்தில் உள்ள இடைப்பாடி அடுத்த புள்ளாக்கவுண்டம்பட்டி, அக்ரஹாரம் கிராமம் வினோபாஜி நகர் பகுதியில் வசித்து வரும் தம்பதி கோகுல் (வயது 30)-சுகமதி (வயது 24). கோகுல் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இத்தம்பதிக்கு சஞ்ஜனா (வயது 6), க்ரிஷிகா (வயது 1) என இரண்டு குழந்தைகள் உள்ளனர். Minor Girl Pregnant: 17 வயது சிறுமி கர்ப்பம்; கட்டிட தொழிலாளி போக்சோவில் கைது..!
இந்நிலையில், கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த மாதம் கோகுலுடன் சண்டை போட்டு, சுகமதி அவரது உறவினரான பெரியம்மா வீட்டிற்கு தனது இரு குழந்தைகளையும் கூட்டிச் சென்றுள்ளார். இதனையடுத்து, மிகுந்த மன உலைச்சலுக்கு ஆளான அவர் அங்கு அவரது பெரியம்மா வீட்டில் இருந்துள்ளார். இந்த சூழலில், நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் சுகமதி மற்றும் குழந்தைகள் எழுந்து வெளியே வராத காரணத்தினால், அவரது பெரியம்மா, வீட்டின் கதவை திறந்து பார்த்துள்ளார். அப்போது, சுகமதி மற்றும் இரு குழந்தைகள் வாயில் நுரை தள்ளிய (Poison Death) நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் இவர்கள் 3 பேரையும் மீட்டு, குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தார். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், 3 பேரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். மேலும், இவர்கள் மூன்று பெரும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டதும் தெரியவந்தது. இதுதொடர்பாக, தேவூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
(The above story first appeared on LatestLY on May 25, 2024 11:39 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

