Young Girl Rape: வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த இளம்பெண் பாலியல் பலாத்காரம்; வாலிபர் கைது..!
கடலூரில் வீட்டில் தனியாக உறங்கிக்கொண்டிருந்த இளம்பெண்ணை, பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
மே 04, கடலூர் (Cuddalore News): கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் பகுதியை சேர்ந்த 18 வயது இளம்பெண், 12-ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு, காட்டுமன்னார்கோவில் பகுதியில் உள்ள அவரது பாட்டி வீட்டில் தங்கியுள்ளார். இந்நிலையில், நேற்று அதிகாலை 5 மணியளவில் பாட்டி வெளியில் சென்றுள்ளார். அந்த சமயத்தில் இளம்பெண் மட்டும் வீட்டில் தனியாக உறங்கிக் கொண்டிருந்துள்ளார். இந்நேரத்தில், பக்கத்து வீட்டை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரது மகன் ஆட்டோ ஓட்டுநர் ரவிராஜ் (வயது 23) என்பவர், இளம்பெண்ணின் வீட்டிற்குள் சென்றார். Teenager Hanging Suicide: ஆன்லைன் வர்த்தக மோகம்; ரூ.53 இலட்சம் இழப்பால், காதல் திருமணமான இளைஞர் தற்கொலை..! பரிதவிப்பில் மனைவி..!
இதனையடுத்து, அங்கு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த இளம்பெண்ணை ரவிராஜ் பாலியல் பலாத்காரம் (Rape) செய்துள்ளார். மேலும், இளம்பெண்ணின் கையில் கத்தியால் வெட்டி உள்ளார். இங்கு நடந்த சம்பவத்தை வெளியில் யாரிடமாவது கூறினால், கொலை செய்துவிடுவேன் என கத்தியை காட்டி மிரட்டல் விடுத்துள்ளார்.
இதற்கிடையில், இளம்பெண்ணின் பாட்டி வீட்டிற்கு வந்துள்ளார். இதனை பார்த்த அவர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இதில் படுகாயமடைந்த இளம்பெண், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், இதுதொடர்பாக குமராட்சி காவல்நிலையத்தில் இளம்பெண் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில், ரவிராஜ் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
(The above story first appeared on LatestLY on May 21, 2024 07:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

