Minor Girl Sexual Abuse: சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முதியவர் போக்சோவில் கைது..!

தனது பேத்தியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முதியவர் போக்சோவில் கைது செய்யப்பட்ட சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Minor Girl Sexual Abuse: சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முதியவர் போக்சோவில் கைது..!
Sexual Abuse / Rape Representational Image (Photo Credit: Pixabay)

மார்ச் 22, கன்னியாகுமரி (Kanyakumari News): கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அருமனை அடுத்து மஞ்சாலுமூட்டையைச் சேர்ந்த ரகுவரன் நாயர் (வயது 59). இவர் நூறு நாள் வேலைத்திட்டத்தில் வேலை செய்து வருபவர். இவரது மனைவி இறந்துவிட்டார். இவருக்கு ஒரு திருமணமான மகன் உள்ளார். அவர் அப்பகுதியைச் சேர்ந்த ஏற்கனவே திருமணமான பெண்ணை இரண்டாம் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளார். அப்பெண்ணுக்கு ஏற்கனவே 5 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. Wife Murder To Husband: கணவனின் கழுத்தை நெரித்து கொன்ற மனைவி கைது – விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

இச்சிறுமியும் தாத்தா ரகுவரனும் வீட்டில் இருக்கும் போது விளையாடி மகிழ்வது வழக்கம். இவ்வாறு, விளையாடிக்கொண்டிருக்கையில் ரகுவரன் சிறுமியை மடியில் வைத்து கொஞ்சுவார். அப்போது அவர், சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனை வழக்கமாக செய்துகொண்டிருந்ததால், சிறுமியின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதனையடுத்து, தாயார் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், பல நாட்களாக சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துவந்துள்ளனர் என தெரிவித்தனர்.

இதுதொடர்பாக, அருமனை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர் விசாரணையில், மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல்நிலையத்துக்கு மாற்றப்பட்டது. சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ரகுவரன் நாயர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.

(The above story first appeared on LatestLY on Mar 22, 2024 04:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).