Girl Sexual Abuse (Photo Credit: Pixabay)

மே 11, செங்கல்பட்டு (Chennai News):  செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பல்லாவரத்தில் வசித்து வரும் 13 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வந்தார். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் சிறுமி வீட்டில் தனியாக இருந்த நிலையில், அவரது பெற்றோர் வேலைக்கு சென்று வருவது வழக்கம் என கூறப்படுகிறது. இதனை நோட்டமிட்ட அதே பகுதியைச் சேர்ந்த தண்ணீர் கேன் போடும் சிறுவன், சிறுமியிடம் அவ்வப்போது பேச்சு கொடுத்து வந்துள்ளார்.

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சிறுவன் :

இதனை தொடர்ந்து இருவரும் நண்பர்களாக பேச தொடங்கிய நிலையில், காதல் மலர்ந்துள்ளது. பின்னர் இருவரும் நெருங்கி பழகவே, சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து வீட்டிற்கு வந்து செல்வதை சிறுவன் வாடிக்கையாக கொண்டுள்ளார். இச்சம்பவம் அடிக்கடி நிகழ்ந்து வந்த நிலையில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை :

மேலும் இதனை தனது நண்பர்களிடம் கூறவே, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய நண்பர்களும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்நிலையில் சிறுமி சில நாட்களாகவே சோர்வடைந்து காணப்பட்டதால் அவரது தாய் குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். Erode News: நம்பி சென்ற 17 வயது சிறுமி.. நண்பர்களுடன் சேர்ந்து சீரழித்த வாலிபர்..! 

கர்ப்பமான சிறுமி :

மருத்துவரின் பரிசோதனையில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட சிறுமி தொடர்பாக குழந்தைகள் நல குழுமம் சங்கர் நகர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் சிறுமியின் தாய் பல்லாவரம் மகளிர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, காவல்துறையினரின் விசாரணையில் இந்த அதிர்ச்சி சம்பவம் அம்பலமானது.

குற்றத்திற்கு தாயும் உடந்தை :

இந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் 7 சிறுவர்கள் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும், புழல் சிறையிலும் அடைக்கப்பட்டனர். இது தொடர்பான விசாரணையில் சிறுமியிடம் இதேபோல பல பேர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதற்கு சிறுமியின் தாயாரும் உடந்தையாக இருந்ததாக அவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.