Accuse Karthick | Chennai Police (Photo Credit: Facebook / Wikipedia)

நவம்பர் 07, வில்லிவாக்கம் (Chennai Crime News): சென்னையில் உள்ள வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த நபர், கணவன் - மனைவி சண்டையில் கத்தியுடன் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக சுற்றி வந்துள்ளார். இதுதொடர்பாக நள்ளிரவு நேரத்தில் பொதுமக்கள் காவல்துறை கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு தொடர்புகொண்டு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, வில்லிவாக்கம் காவல் துறையினர் நிகழ்விடத்திற்கு விரைந்த நிலையில், கத்தியுடன் இருந்தவர் காவலர்களிடம் சண்டையிட்டுள்ளார். மேலும், அதிகாரிகள் அவரின் வீட்டை ஆய்வு செய்யவே, அங்கிருந்த டிபன் பாக்ஸை திறக்க முயற்சித்துள்ளனர்.

அப்போது, டிபன் பாக்சில் வெடிகுண்டு இருப்பதாக மர்ம நபர் எச்சரித்துள்ளார். இதனையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், 2 டிபன் பாக்சில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது உறுதியானது.

காவல் துறையினர் தன்னை கைது செய்யப்போகிறார்கள் என்பதை அறிந்துகொண்ட இளைஞர் அங்கிருந்து தப்பிச்சென்றார். நேற்று அவரை கைது செய்த அதிகாரிகள் விசாரணை நடத்தினர். Earthquake on Bay of Bengal: வங்காள விரிகுடா கடலில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்; தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் அறிவிப்பு.!

விசாரணையில், இராணிப்பேட்டை மாவட்டத்தில் வசித்து வருபவர் கார்த்திக் (வயது 27). இவர் அப்பகுதியில் ரௌடி போல திரிந்த காரணத்தால், அங்குள்ள சுற்றுவட்டார காவல் நிலையத்தில் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், எதிராளிகள் அச்சுறுத்தலும் இருந்துள்ளது.

இதனால் சென்னை வந்த அவர் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். எதிராளிகள் எந்நேரமும் தன்னை கண்டுபிடிக்கலாம் என்ற பயத்தால், தன்னுடனே 2 டிபன்பாக்சில் நாட்டு வெடிகுண்டையும் கையில் வைத்து சுற்றி வந்துள்ளார். அவரிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது.