Kallakurichi News: கள்ளகாதலனுடன் மொட்டை மாடியில் உல்லாசமாக இருந்த மனைவி.. தலை துண்டித்து கொடூரமாக இரட்டைப் படுகொலை.. கள்ளக்குறிச்சியில் பயங்கரம்.!

வீட்டின் மொட்டை மாடியில் இரவில் கள்ளக்காதல் ஜோடி சந்தித்துக்கொண்ட நிலையில், அதனை நேரில் பார்த்த கணவர் மனைவி, அவரது காதலனை தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று நடந்துள்ளது.

Kallakurichi News: கள்ளகாதலனுடன் மொட்டை மாடியில் உல்லாசமாக இருந்த மனைவி.. தலை துண்டித்து கொடூரமாக இரட்டைப் படுகொலை.. கள்ளக்குறிச்சியில் பயங்கரம்.!
Kallakurichi Affair Double Murder Case (Photo Credit: Facebook / Pixabay)

செப்டம்பர் 11. கள்ளக்குறிச்சி (Kallakurichi News): கள்ளக்குறிச்சி மாவட்டம், மலைகோட்டாலம் கிராமத்தில் வசித்து வருபவர் கந்தன். இவரின் மகன் தங்கராசு. இதே பகுதியில் வசித்து வருபவர் கொளஞ்சி. இவரின் மனைவி லட்சுமி. இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவில் கள்ளக்காதல் ஜோடி நேரில் சந்தித்துள்ளது. அதாவது, லட்சுமியின் வீட்டின் மொட்டை மாடியில் இருவரும் சந்தித்துக்கொண்டுள்ளனர். Chennai News: விடுதி அறையில் சோகம்.. காதலன்-காதலி அடுத்தடுத்து உயிரைமாய்த்ததால் கண்ணீர்..! 

இருவர் தலை துண்டித்து கொலை:

அப்போது, இதனை நேரில் பார்த்த கொளஞ்சி ஆத்திரத்தில் இருவரின் தலையையும் வெட்டிக்கொலை செய்து இருக்கிறார். பின் அவர்களின் தலையை தனியே துண்டித்து நேரடியாக வேலூர் மத்திய சிறைக்குச் சென்று சரணடைந்துள்ளார். இருவர் கொலை செய்யப்பட்டதாக தகவல் அறிந்த காவல்துறையினர், நேரில் விரைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை நடந்ததா? வேறு காரணமா? எனவும் விசாரணை நடக்கிறது. முதற்கட்ட தகவலில் லட்சுமி - தங்கராசு இடையே கள்ளக்காதல் பழக்கமும் தெரியவந்துள்ளது. கொளஞ்சியை கைது செய்து விசாரணை நடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

(The above story first appeared on LatestLY on Sep 11, 2025 09:39 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).