Women Boils Boy Friend: கள்ளக்காதல் பழக்கத்தை கைவிட்டவரை கொதிக்கும் எண்ணெய் ஊற்றி கொலை செய்ய முயற்சித்த இளம்பெண்.. ஈரோட்டில் அதிர்ச்சி.!

கல்லூரியில் படிக்கும்போதே உறவினருடன் தொடர்பு வைத்திருந்த பெண்மணி, மற்றொரு ஆணை திருமணம் செய்து கள்ளக்காதலை கைவிடாமல் தொடர்ந்து வந்த நிலையில், இதில் பெண் கள்ளக்காதல் மோகத்தால் கொலை முயற்சி வழக்கில் கைதாகியுள்ளார்.

நிழற்படம் மீனா தேவி (வயது 27)

மார்ச் 13, பவானி (Erode News): ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி (Bhavani, Erode), வர்ணபுரம் 5வது தெருவில் வசித்து வருபவர் கார்த்திக் (வயது 26). இவர் பெருந்துறையில் (Perundurai) செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கார்த்திக்கின் உறவினர் பூபதி. பூபதியின் மனைவி மீனா தேவி (வயது 27). தம்பதிகள் பவானி மீனாட்சி கல்யாண மண்டப வீதியில் வசிக்கிறார்கள்.

இதில், கார்த்திக்கும் - மீனா தேவியும் ஈரோட்டில் செயல்பட்டு வந்த தனியார் கல்லூரியில் ஒன்றாக படித்துள்ளார். இதனால் அப்போதில் இருந்தே இருவரும் நண்பர்களாக (Friends) இருந்துள்ளனர். மீனா தேவிக்கு இடைப்பட்ட காலத்தில் திருமணம் நடந்துவிட, திருமணத்திற்கு (Marriage) பின்னர் அவருக்கு 6 வயதுடைய பெண் குழந்தை இருக்கிறது. மீனா தேவியின் இல்லத்திற்கு அவ்வப்போது கார்த்திக் சென்று வந்துள்ளார்.

இது கார்த்திக் - மீனா தேவியிடையே கள்ளக்காதல் (Illegal Affair) பழக்கத்தை ஏற்படுத்த, இருவரும் பலமுறை உல்லாசமாக (Couple Enjoy) இருந்து வந்துள்ளனர். இருவரும் உறவினர்கள் என்பதால், பெரிய அளவில் பூபதிக்கு சந்தேகமும் ஏற்படவில்லை. இதற்கிடையே கார்த்திக்கிற்கு நாமக்கல், குமாரபாளையத்தில் (Komarapalayam, Namakkal) வசித்து வரும் பெண்ணுடன் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளன. இந்த தகவல் அறிந்த மீனா தேவி கார்த்திக்கை வீட்டிற்கு அழைத்துள்ளார். Women Attacked: கணவரை இழந்த பெண்ணை ஏளனம் பேசி மின்கம்பத்தில் கட்டிவைத்த ஆட்டோ ஓட்டுனர்கள்.. ஆப்படித்த காவல்துறை.! 

நேற்று மதிய நேரத்தில் கார்த்திக் கள்ளக்காதலி மீனா தேவியின் வீட்டிற்கு வந்துவிட, அங்கு இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்துள்ளது. மீனா தேவி நீ எப்படி வேறொரு பெண்ணை திருமணம் செய்யலாம்?? என கேள்வி எழுப்பியுள்ளார். வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த மீனா தேவி, வீட்டில் கொதித்துக்கொண்டு இருந்த பாமாயில் எண்ணெயை கார்த்திக்கின் மீது ஊற்றியுள்ளார்.

இதனால் அவரின் கழுத்து, முகம், கை, தோள்பட்டை பகுதியில் தீக்காயம் இருந்துள்ளது. கார்த்திக் தனது இருசக்கர வாகனத்திலேயே மருத்துவமனைக்கு சென்று சிகிச்சைக்கு அனுமதியக, அங்கிருந்து மேல் சிகிச்சைக்கு ஈரோட்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எண்ணெய் ஊற்றியதில் 15% தீக்காயம் கார்த்திக்குக்கு ஏற்பட்டது. இந்த விசயம் தொடர்பாக பவானி காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

பின்னர், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ஈரோடு கருங்கல்பாளையத்தில் பதுங்கி இருந்த மீனா தேவி கைது செய்யப்பட்டார். அவரிடம் நடந்த விசாரணையில், "கார்த்திக்கும் - நானும் ஈரோடு தனியார் கல்லூரியில் படிக்கும் போதே எங்களுக்குள் பழக்கம் இருந்தது. உறவினரான பூபதியை நான் திருமணம் செய்த பின்னரும் அடிக்கடி தனிமையில் இருந்தோம்.

இதற்கிடையில், என்னுடன் இருந்த மொத்த தொடர்பையும் துண்டித்துவிட்டு, வேறொரு திருமணம் செய்ய அவர் முடிவெடுத்தால் ஆத்திரமடைந்தேன். வீட்டிற்கு அழைத்து அது தொடர்பாக பேசியபோது வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த நான் சமையலுக்காக கொதிக்கவைத்த எண்ணெயை அவரின் மீது ஊற்றினேன்" என தெரிவித்துள்ளார். தற்போது மீனா தேவி கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement