Chennai Crime News: பட்டப்பகலில் வாலிபர் வெட்டி படுகொலை... சென்னையில் பரபரப்பு..!
சென்னை சென்ட்ரல் அருகே பட்டப்பகலில் டாஸ்மாக் வாசலில் பிரபல ரவுடி வெற்றி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டிசம்பர் 20, சென்னை (Chennai): சென்னை சென்ட்ரல் வால்டாக்ஸ் சாலை பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் ரவுடி பிரேம்குமார் (வயது 35). இவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் ரவுடி பிரேம்குமார் மற்றும் அவரது கூட்டாளிகளுடன் சென்ட்ரல் பூந்தமல்லி நெடுஞ்சாலை எவரெஸ்ட் பேருந்து நிலையம் எதிரே உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு பயங்கர ஆயுதங்களுடன் வந்த 7 பேர் கொண்ட கும்பல் பிரேம்குமாரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. MPs Suspended: மக்களவையில் மேலும் 2 எம்.பி.க்கள் இடைநீக்கம்.. அமளியால் தொடரும் அதிரடி நடவடிக்கை.!
சென்னையில் பரபரப்பு: இதனை தடுக்க முயன்ற நண்பர்களுக்கும் வெட்டு விழுந்துள்ளது. பின்னர், அந்த கும்பல் அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளது. இச்சம்பவம் சென்னை முழுதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதன்படி முதற்கட்ட விசாரணையில் பிரேம் குமார் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் கொலை செய்தவர்களை தேடும் பணியானது நடந்து வருகிறது.
(The above story first appeared on LatestLY on Dec 20, 2023 07:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

