+2 Student Dies By Suicide: +2 தேர்வில் தோல்வி பயம்.. உயிரை மாய்த்துக் கொண்ட மாணவி தேர்ச்சி.. குடும்பத்தினர் சோகம்..!

தஞ்சாவூரில் +2 பொதுத்தேர்வு முடிவில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற அச்சத்தில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

+2 Student Dies By Suicide: +2 தேர்வில் தோல்வி பயம்.. உயிரை மாய்த்துக் கொண்ட மாணவி தேர்ச்சி.. குடும்பத்தினர் சோகம்..!
+2 Student Dies By Suicide (Photo Credit: YouTube)

மே 08, பாபநாசம் (Thanjavur News): தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் (Papanasam) அருகே படுகை புதுத் தெருவை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி. இவரது மகள் ஆர்த்திகா (வயது 17), பாபநாசத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி ரிசல்டுக்காக காத்திருந்தார். இந்நிலையில், இன்று (மே 08) மகளை காணாத அவரது பெற்றோர் வீட்டின் பின்புறம் உள்ள மாட்டுக்கொட்டகைக்கு சென்று பார்த்தபோது, ஆர்த்திகா துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை (Hanging Suicide) செய்துகொண்டது தெரியவந்தது. 12th Board Exam Result: 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 2025: ஆன்லைனில் பார்ப்பது எப்படி? விபரம் இதோ.!

12ஆம் வகுப்பு மாணவி தற்கொலை:

இதனையடுத்து, மாணவியை மீட்டு பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக பாபநாசம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் முதற்கட்ட விசாரணையில், இன்று +2 தேர்வு முடிவுகள் வெளியாவதையொட்டி, எங்கே தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயத்தில், மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரியவந்தது. இதனிடையே, இன்று காலை வெளியான பொதுத்தேர்வு முடிவுகளில் மாணவி ஆர்த்திகா 413 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார்.

தற்கொலை தடுப்பு மற்றும் மனநல உதவி எண்கள்:

டெலி மனாஸ் (Tele Manas) சுகாதார அமைச்சகம் - 14416 அல்லது 1800 891 4416; நிம்ஹான்ஸ் (NIMHANS) + 91 80 26995000 / 5100 / 5200 / 5300 / 5400; பீக் மைண்ட் (Peak Mind) - 080 456 87786; வந்த்ரேவாலா அறக்கட்டளை - 9999 666 555; அர்பிதா தற்கொலை தடுப்பு உதவி எண் - 080-23655557; iCALL - 022-25521111 மற்றும் 9152987821; COOJ மனநல அறக்கட்டளை - 0832-2252525, தற்கொலை தடுப்பு மையம் கோயம்புத்தூர் - 0422-2300999, சினேகா தற்கொலை தடுப்பு மையம் சென்னை - +91 44 2464 0060 மற்றும் +91 44 2464 0050.

 

(The above story first appeared on LatestLY on May 08, 2025 11:04 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).