Rowdy Killed: "கத்தியை எடுத்தவன் கத்தியால் அழிவான்" - எதிராளிகளை போட்டுத்தள்ளச்சென்ற ரௌடி கொடூர கொலை..!

வினைவிதைத்தவன் வினையறுப்பான் என்ற பாணியில், கத்தியை எடுத்தவர் கத்தியால் அழிந்த பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு. பகையாளிகளை கொலை செய்ய கத்தியுடன் சென்ற ரௌடியை, அவர் கொண்டு வந்த கத்தியாலேயே மூவர் கும்பல் குத்திக்கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.

Crime Scene File Pic (Photo Credit: Pixabay)

நவம்பர் 24, எண்ணூர் (Chennai News): சென்னையில் உள்ள எண்ணூர் (Ennore Rowdy Killed), அன்னை சிவகாமி நகரில் வசித்து வருபவர் பாலா. இவர் தண்டனை குற்றவாளி ஆவார். ரௌடியாகவும் உள்ளூரில் வலம் வந்துள்ளார். குற்றவழக்கு ஒன்றில் ஏற்கனவே கைதான பாலா, சமீபத்தில் தான் சிறையில் இருந்து பிணையில் விடுவிக்கப்பட்டார். சிறைக்கு செல்லும் முன், அப்பகுதியில் வசித்து வந்த சஞ்சய், ஈஸ்வர பாண்டியன், சூர்யா ஆகியோருடன் அவ்வப்போது தகராறு செய்து வந்ததில் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

பிணையில் வந்தவர் ஆத்திரத்தில் அதிர்ச்சி செயல்:

இதனிடையே, சிறையில் இருந்து பிணையில் வந்தவர், தன்னிடம் முன்பகை வைத்த மூவரையும் கொலை செய்ய வேண்டும் என எண்ணியுள்ளார். இதனால் தனது வீட்டில் இருந்து கத்தியை எடுத்துக்கொண்டவர், மூவரையும் கொலை செய்யும் எண்ணத்துடன் அவர்களின் இருப்பிடம் நோக்கி சென்றுள்ளார். Hair Dryer Blast Case: ஹேர் ட்ரையர் வெடித்த விவகாரம்.. தகாத உறவால் பகீர்.. பழிவாங்கும் எண்ணத்தில் சிக்கிய காதலி.! 

திசை மாறிய கத்தி:

அங்கு மூவர் கும்பல் - பாலா இடையே திரைப்பட பாணியில் சண்டை நடந்த நிலையில், பாலா திட்டமிட்டு எடுத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வந்ததை அறிந்து, அவரின் கத்தியாலேயே பாலா மீது சரமாரி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் பாலா நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

ரௌடி கொலை:

தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், பாலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நண்பர்கள் மூவரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் உண்டாக்கி இருக்கிறது.

வினைவிதைத்த ரௌடி அவரின் சொந்த கத்தியாலேயே வினையறுக்கப்பட்ட சம்பவம் பழமொழிகளை மெய்பிக்கும்பொருட்டு அமைந்துள்ளது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement