மார்ச் 30, கல்லுக்குட்டை (Chennai News): சென்னையில் உள்ள பெருங்குடி, கல்லுக்குட்டை பகுதியில் வசித்து வருபவர் ஜீவரத்தினம் (வயது 26). இவரின் நண்பர்கள் அப்பு, கோகுல், ரமேஷ் அஜய், ஜெகதீஷ். ஜீவரத்தினம் அப்புவின் மனைவியிடம் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இந்த விஷயம் அப்புவுக்கு தெரியவரவே, அவர் ஜீவரத்தினத்தை கண்டித்து இருக்கிறார். இதனை கேட்காதவர், தொடர்ந்து அப்புவின் மனைவியிடம் பேசி வந்துள்ளார். இதனால் ஜீவரத்தினத்தை உரிய முறையில் கண்டிக்க வேண்டும் என நினைத்த அப்பு, தனது நண்பர்கள் கோகுல், ரமேஷ் அஜய், ஜெகதீஷ் ஆகியோரை அழைத்து சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருக்கிறார். கர்ப்பிணிக்கு தள்ளுவண்டியில் குழந்தை பிறந்து பலி.. கணவரின் இறுதிக்கட்ட போராட்டம்.. அதிர்ச்சி காட்சிகள்.!
நண்பன் அடித்துக்கொலை:
அப்போது, ஜீவரத்தினம் தொடர்ந்து திமிரான முறையில் பேசிக்கொண்டு இருக்கவே, ஆத்திரமடைந்த அப்பு மற்றும் பிற நண்பர்கள் தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். இந்த சம்பவத்தில் ஜீவரத்தினம் படுகாயம் அடைந்தார். உயிருக்கு போராடியவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஜீவரத்தினத்தை சிகிச்சைக்கு அனுமதி செய்தனர். மேலும், கொலை முயற்சி என வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அப்பு, கோகுல், ரமேஷ், அஜய், ஜெகதீஷ் ஆகிய ஐவரை கைது செய்தனர். 10-Year-Old Girl Raped: பாலியல் வன்கொடுமை & கட்டாய திருமண அதிர்ச்சி.. 10 வயது பிஞ்சுக்கு நேர்ந்த கொடுமை.!
விசாரணையில் அதிர்ச்சி திருப்பம்:
முதற்கட்ட விசாரணையில், இவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து மதுபானம் அருந்தியபோது, சென்னை - பெங்களூர் ஐபிஎல் (CSK Vs RCB IPL 2025) ஆட்டத்தில், சென்னை அணி தோற்றத்தை ஜீவரத்தினம் கிண்டல் அடித்ததால் கொலை நடந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், இவர்கள் முரணாக பதில் அளித்ததால், காவல்துறையினர் தங்களின் பாணியில் விசாரணை நடத்தியபோது, அனைத்து உண்மையும் அம்பலமானது. அதாவது, அப்புவின் மனைவியிடம் ஜீவரத்தினம் பேசி வந்தது தொடர்பான விவகாரத்தில் கொலை நடந்துள்ளது.
இதனையடுத்து, கொலை முயற்சி பிரிவில் பதிந்த வழக்கை கொலையாக மாற்றிய காவல்துறையினர், ஆலந்தூர் நீதிமன்றத்தில் குற்றவாளிகளை சமர்ப்பித்து சிறையில் அடைத்தனர். மேலும், பலியான ஜீவரத்தினம் மீது திருட்டு உட்பட 9 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.