Coimbatore News: சிறுவனுக்கு அவசர உதவி.. 3 மணிநேரத்தில் போராடி உயிரை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர்.. குவியும் பாராட்டுக்கள்.!

மலைப்பாதையான பகுதியில் 6 மணிநேர பயணத்தை 3 மணிநேரமாக குறைத்து சிறுவனின் உயிரை காப்பாற்றிய ஓட்டுனரின் செயல் பாராட்டுகளை குவித்து வருகிறது.

Coimbatore News: சிறுவனுக்கு அவசர உதவி.. 3 மணிநேரத்தில் போராடி உயிரை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர்.. குவியும் பாராட்டுக்கள்.!
Coimbatore Ambulance Driver Saves Child Life (Photo Credit: @SunnewsTamil X)

மே 03, கோவை (Coimbatore News Today): நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரைச் சேர்ந்த சிறுவன் நவநீத். இவரின் கண்களில் மரக்கட்டை பட்டு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்ட சிறுவனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. மேற்படி சிறுவனுக்கு உயரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதால், தாமதிக்காமல் கோவையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல அறிவுறுத்தியுள்ளனர். Kozhikode Hospital Fire: அரசு மருத்துவமனையில் தீ விபத்து.. 4 உயிர்கள் பரிதாப பலி..! 

ஆம்புலன்ஸ் ஓட்டுனரின் நெகிழ்ச்சி செயல்:

இதனால் சிறுவனின் பெற்றோர் அவரச ஊர்தியின் உதவியை நாடிய நிலையில், தனியார் அவசர ஊர்தி ஓட்டுநர் யேசுதாஸ் உதவ முன்வந்துள்ளார். 5 மணிநேரம் முதல் 6 மணிநேரம் வரை ஆகும் தூரத்தை, அவசர ஊர்தி ஓட்டுநர் தனது பிற நண்பர்கள் உதவியுடன் 3 மணிநேரத்தில் கடந்துள்ளார். மலைப்பாங்கான பாதையில் அவசர ஊர்திகள் அவசர ஒலியை எழுப்பியபடி தொடர்ந்து பயணித்து 3 மணிநேரத்தில் கோவையில் உள்ள மருத்துவமனைக்கு வந்தடைந்தது. இந்த உதவியை செய்த அவசர ஊர்தி ஓட்டுனருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

அவசர ஊர்தியில் 3 மணிநேரத்தில் கோவையை வந்தடைந்த ஓட்டுனருக்கு குவியும் பாராட்டு:

(The above story first appeared on LatestLY on May 03, 2025 04:32 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).