Dead Body (Photo Credit: Pixabay)

மார்ச் 18, காட்டுமன்னார்கோவில் (Cuddalore News): கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோவில், மழுவத்தேரி கிராமத்தில் வசித்து வருபவர் பாலமுருகன் (வயது 45). இவரின் மனைவி வாசுகி (வயது 36). தம்பதிகளுக்கு மகன், மகள் இருக்கின்றனர். 14 வயதுடைய மகள் கீர்த்திகா, மேலணிக்குழி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். வீட்டில் இருக்கும் சிறுமி எப்போதும் ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் பழக்கத்தை கொண்டதாக தெரியவருகிறது. இதனால் மகளின் செயல்பாடுகளை அவ்வப்போது பெற்றோர் கண்டித்து இருக்கின்றனர். இதனிடையே, நேற்று சிறுமி செல்போனை பயன்படுத்தி இருக்கிறார். இதனை கவனித்த வாசுகி, மகளிடம் இருந்து செல்போனை பிடுங்கி வைத்துள்ளார். அவர் வாரச்சந்தைக்குச் சென்று வீட்டுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி இருக்கிறார். வானிலை: அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை எப்படி? வானிலை நிலவரம் இதோ..! 

சிறுமி தற்கொலை செய்து மரணம்:

பின் மீண்டும் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, அவர் உத்திரத்தில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், கீர்த்திகாவை மீட்டு காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர். அங்கு கீர்த்திகாவின் மரணம் உறுதி செய்யப்பட்டது. இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.