Death Case (Photo Credit : santhoshkr41401 X)

மே 16, விருத்தாச்சலம் (Cuddalore News Today): கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாச்சலம் அடுத்த வளையமாதேவி கிராமத்தை சேர்ந்தவர் பிரபு. இவரது மனைவி தேன்மொழி. தம்பதிக்கு சிவானிஸ்ரீ என்ற மகள் உள்ள நிலையில், குடும்ப செலவுகளை கவனிப்பதற்காக கேரளாவில் வேலை செய்து வருகின்றனர். தம்பதியின் மகள் விருத்தாசலம் அருகே உள்ள கார்குடல் கிராமத்தில் தனது தாத்தா வீட்டில் தங்கி அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு (SSLC Result 2025) பயின்று வந்துள்ளார்.

மதிப்பெண் குறைந்ததால் மன உளைச்சல் :

இந்த நிலையில் இன்று காலை 9 மணியளவில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் (TN Result 2025) வெளியானதை தொடர்ந்து, சிவானிஸ்ரீ 500-க்கு 201 மதிப்பெண்கள் எடுத்ததாக தெரிய வருகிறது. இதன் காரணமாக மன உளைச்சல் அடைந்தவர் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 10th Board Exam Result: 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது.. முதலிடம் பிடித்த சிவகங்கை.. 98.31% தேர்ச்சி..!

உயிரிழந்த மாணவி :

வெகு நேரமாகியும் மாணவி சிவானிஸ்ரீ வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் நேரில் சென்று பார்த்தபோது அவர் தூக்கிட்ட நிலையில் இருப்பதை கண்டு அதிர்ந்தனர். இதனை தொடர்ந்து மாணவியை மீட்டவர்கள் அவர் சுயநினைவின்றி இருந்ததால் விருத்தாச்சலம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மாணவியின் மரணத்தை உறுதி செய்துள்ளனர்.

தற்கொலை குறித்து போலீஸ் விசாரணை :

மேலும் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தற்கொலை தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொதுத் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாணவி சிவானிஸ்ரீயின் மரணத்தால் கதறும் குடும்பத்தினர் :