மே 16, பரமத்தி வேலூர் (Namakkal News Today): நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்திவேலூர், பிலிக்கல்பாளையம், நல்லா கவுண்டம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் பிரகாசம். இவரின் மனைவி கவிதா (வயது 40), அங்கன்வாடி மைய பணியாளர் ஆவார். தம்பதிகளுக்கு கீர்த்திவாசனி என்ற 15 வயதுடைய மகள் இருக்கிறார். இவர் அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார். பொதுத்தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காக காத்திருந்தார். 10th Board Exam Result: 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது.. முதலிடம் பிடித்த சிவகங்கை.. 98.31% தேர்ச்சி..!
தூக்கில் சடலமாக மாணவி:
இந்நிலையில், இன்று காலை தேர்வு முடிவுகள் வெளியாகிய நிலையில், குறைந்த மதிப்பெண் கிடைக்குமோ என்ற அச்ச உணர்வுடன் மாணவி இருந்து வந்துள்ளார். இதனிடையே, வீட்டில் தனியாக இருந்த மாணவி ஆட்கள் இல்லாத நேரத்தில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அங்கன்வாடிக்கு சென்றிருந்த மாணவியின் தாய் வீட்டுக்கு வந்தபோது மகள் தூக்கில் தொங்குவதைக்கண்டு அலறியுள்ளார்.
தேர்வில் தேர்ச்சி:
சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் ஜேடர்பாளையம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின் நேரில் வந்த அதிகாரிகள் மாணவி கீர்த்திவாசனியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, மனைவி மொத்தமாக 500 க்கு 348 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்ததாக முடிவுகள் வெளியாகின.
தமிழ் - 70
ஆங்கிலம் - 83
கணிதம் - 81
அறிவியல் - 70
சமூக அறிவியல் - 44
மொத்தம் = 348