Tenkasi News: முதியோர் இல்லத்தில் மரணம்.. அதிரவைக்கும் ஆய்வு ரிப்போர்ட்.!
தென்காசி அன்னை முதியோர் ஆதரவற்றோர் இல்லத்தில் இரவு உணவு அருந்திய முதியவர்களுக்கு காலை உணவு ஒவ்வாமை (Food Poison) ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில் குடிநீரில் பாக்டீரியா இருந்தது ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.
ஜூன் 20, தென்காசி (Tenkasi News Today): தென்காசி மாவட்டத்தில் உள்ள சுந்தரபாண்டியபுரம், கீழபாட்டாக்குறிச்சி கிராமத்தில் அன்னை முதியோர் ஆதரவற்றோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த முதியோர் இல்லத்தில் 61க்கும் மேற்பட்ட குடும்பத்தால் கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்றோர் தங்கியுள்ளனர். இவர்களுக்கு முதியோர் இல்லம் நிர்வாகம் சார்பில் தினமும் உணவுகளும் ஏற்பாடு செய்து கொடுக்கப்படுகிறது. அன்னதானம் உட்பட பிற விஷயங்களுக்காக நன்கொடை வழங்குவதும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
உணவு ஒவ்வாமை பாதிப்பு :
கடந்த ஜூன் 8-ஆம் தேதி இரவு நேரத்தில் இவர்களுக்கு சாப்பிட மாமிச உணவு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் உணவு ஒவ்வாமை (Food Poison) ஏற்பட்டு 11 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், அடுத்தடுத்து தென்காசி அரசு மருத்துவமனையில் (Tenkasi Government Hospital) அனுமதி செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் சங்கர் என்பவர் ஜூன் 8-ஆம் தேதியே பரிதாபமாக உயிரிழந்தார். அதனை தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் 4 பேர் உயிரிழந்தனர். கள்ளக்காதல் ஆசை.. மனைவியின் மூக்கை கடித்து துப்பிய கணவர்.. அதிர்ச்சி சம்பவம்.!
குடிநீரில் பாக்டீரியா :
இந்த இறப்பு குறித்து தகவலறிந்த தென்காசி மாவட்ட மருத்துவ குழுவினர் மற்றும் காவல்துறையினர் (Tenkasi Food Poison) இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், முதியோர் இல்லத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், குடிநீர் மற்றும் உணவு மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. உணவு பாதுகாப்புத்துறை, சுகாதாரத்துறை மேற்கொண்ட ஆய்வில் குடிநீரில் ஈ-கோலி பாக்டீரியா (E-coli Bacteria) இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் உடற்கூராய்வின் முடிவுகள் வந்தால் மட்டுமே இறப்பிற்கான காரணம் தெரியும் எனவும், மேற்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(The above story first appeared on LatestLY on Jun 20, 2025 05:48 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

