Tirunelveli College Girl Kalaiselvi Dies (Photo Credit: YouTube)

ஏப்ரல் 06, மானூர் (Tirunelveli News): திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாவடி, மானூர் பகுதியில் வசித்து வருபவர் கலைச்செல்வி (வயது 19). இவர் நெல்லையில் உள்ள கல்லூரியில், பிஏ இரண்டாம் ஆண்டு ஆங்கிலம் பாடப்பிரிவில் படித்து வருகிறார். கலைச்செல்வியின் பெற்றோர் குஜராத்தில் இட்லி கடை நடத்தி வைக்கின்றனர். இதனால் கலைச்செல்வி கிராமத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். கடந்த ஏப்ரல் 01, 2025 அன்று மாலை சுமார் 6 மணியளவில் கலைச்செல்வி தனது பெற்றோரிடம் செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார். வீட்டின் பக்கவாட்டு சுவரில் அமர்ந்தபடி செல்போனில் பேசிய கலைச்செல்வி, எதிர்பாராத விதமாக தலைகுப்பற கவிழ்ந்தார். இதில் தலையில் படுகாயமடைந்து மயங்கி கிடந்தார். மாணவருடன் உல்லாசம் அனுபவித்த 41 வயது பெண் ஆசிரியை.. அதிரடி காட்டிய போலீஸ்.! 

தந்தை கண்ணீர் பேட்டி:

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்-பக்கத்தினர் உடனடியாக கலைச்செல்வியை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர். பின் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் அனுமதி செய்யப்பட்டார். தொடர்ந்து கடந்த 5 நாட்களாக சிகிச்சையில் இருந்த சிறுமி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மாணவியின் பெற்றோரால் உடல் உறுப்புக்கள் தானம் கொடுக்கப்பட்டது. மகளின் மரணம் குறித்து கண்ணீர்பட பேசிய கலைச்செல்வியின் தந்தை, மகள் தன்னிடம் பேசிக்கொண்டு இருக்கும்போதுதான் விபரீதம் நேர்ந்ததாக கூறினார். மாணவியின் உடல் அரசுமரியாதைக்கு பின் அவர்களின் குடும்பத்தினரால் நல்லடக்கம் செய்யப்பட்டது.