வானிலை: சென்னை, காஞ்சிபுரம், தர்மபுரி உட்பட 13 மாவட்டங்களில் மழை.. காலை 10 மணிவரை வானிலை நிலவரம் இதோ.!
செங்கல்பட்டு, நீலகிரி, கோயம்புத்தூர், தர்மபுரி உட்பட 13 மாவட்டங்களில் இன்று (ஆகஸ்ட் 15, 2025) காலை 10 மணிவரையில், அடுத்த 3 மணிநேரத்துக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தனது வானிலை நிலவரம் (Tamilnadu Weather Alert) செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 18, நுங்கம்பாக்கம் (Chennai News): மத்திய மேற்கு, அதனை ஒட்டியுள்ள வட மேற்குவங்கக்கடல், வடக்கு ஆந்திரா-தெற்கு ஒரிசா கடலோரப் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, ஆகஸ்ட் 19 (நாளை) மாலையில் தெற்கு ஒரிசா-வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளை கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கு திசைக் காற்றின் வேகமாறுபாடு காரணமாக ஆகஸ்ட் 18ஆம் தேதியான இன்று, தமிழகத்தில் ஒரு சில இடத்திலும், புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யலாம். ஒரு சில இடங்களில் தரைக்காற்று மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகமாக 50 கிலோமீட்டர் வேகமாக வீசக்கூடும். வானிலை: நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. வானிலை மையம் அறிவிப்பு.!
சென்னை வானிலை:
தலைநகர் சென்னையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலையாக 33 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 26 டிகிரி செல்சியசும் பதிவாகலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தனது இன்றைய வானிலை (Today Weather) மற்றும் நாளைய வானிலை (Tomorrow Weather) குறிப்பில் தெரிவித்திருந்தது.
காலை 10 மணிவரையில் மழைக்கு வாய்ப்பு:
இந்நிலையில், இன்று காலை 10 மணிவரையில், அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நீலகிரி, கோயம்புத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தென்காசி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் காலை 10 மணி வரையில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
(The above story first appeared on LatestLY on Aug 18, 2025 07:21 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

