Porn Addiction (Photo Credit: Pixabay)

மார்ச் 06, சென்னை (Chennai News): இந்தியா முழுவதும் குறிப்பாக தமிழகத்தில் நாளுக்குநாள் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. சிறுமிகள், பெண்கள் உட்பட பலரும், தாங்கள் பயிலும் பள்ளியிலும், பெண்கள் வேலை பார்க்கும் இடங்களிலும்  பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். அதனை தடுக்கும் விதமாக, ஆபாச படம், வீடியோ பதிவிறக்கம் செய்த, 13 ஆயிரம் பேருக்கு, காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொளுத்தும் கோடை வெயில்.. காவலர்களுக்கு ஏசி ஹெல்மெட்..!

காவல்துறையினர் எச்சரிக்கை:

சைபர் குற்றத்தடுப்பு பிரிவு காவல் அதிகாரிகள் இதுகுறித்து கூறுகையில், பாலியல் வன்கொடுமை, பெண்கள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட, 43 ஆயிரம் பேர், காவல்துறையினரின் தீவிர கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டுள்ளனர். ஆபாச படங்கள் (Pornographic) மற்றும் வீடியோக்கள் பதிவிறக்கம் செய்த, 13 ஆயிரம் பேருக்கு, எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. வியாபார நோக்கத்தில் ஆபாச படம் மற்றும் வீடியோ பதிவிறக்கம் செய்தால், கைது செய்யப்பட்டு, 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிவித்தனர்.