Couple Dies By Suicide: குழந்தை இல்லாத ஏக்கம்; எலி மருந்தை உடலில் செலுத்தி தம்பதி தற்கொலை..!

நாகப்பட்டினத்தில் கேரளாவை சேர்ந்த தம்பதி எலி மருந்தை ஊசி மூலம் உடலில் செலுத்தி, தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Couple Dies By Suicide: குழந்தை இல்லாத ஏக்கம்; எலி மருந்தை உடலில் செலுத்தி தம்பதி தற்கொலை..!
Poison | Death File Pic (Photo Credit: Pixabay)

ஜூலை 04, வேளாங்கண்ணி (Nagapattinam News): கேரள மாநிலம், எர்ணாகுளம் கருகுட்டி மாவேலி ஹவுஸ் பகுதியை சேர்ந்த ஷாஜூ என்பவரது மகன் ஆண்டோ வர்க்கீஸ் (வயது 34). இவரது மனைவி ஜிஸ்மால் (வயது 29). இத்தம்பதிக்கு திருமணம் முடிந்து 9 வருடங்கள் ஆன நிலையில், குழந்தை இல்லாததால் பல்வேறு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இதற்காக அவர்கள் பல பேரிடம் கடன் வாங்கியுள்ளனர். Young Woman Dies At Gym: உடற்பயிற்சி கூடத்தில் இளம்பெண் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு.. அதிர்ச்சி சம்பவம்..!

இந்நிலையில், கடந்த ஜூலை 02-ஆம் தேதி அன்று நாகை மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணிக்கு சென்றுள்ளனர். அங்கு ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். அப்போது, குழந்தை இல்லாத விரக்தியிலும், அதிக கடன் தொல்லையாலும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான ஆண்டோ வர்க்கீஸ் எலி மருந்தை (Rat Poison) தண்ணீரில் கலந்து ஊசி மூலம் உடலில் செலுத்திக்கொண்டு மயங்கி விழுந்துள்ளார். இதனைப் பார்த்த அவரது மனைவி உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.

இதனையடுத்து, தனது கணவர் இறந்த துக்கத்தில் மருத்துவமனையில் இருந்த அவர், தான் தங்கிருந்த அறைக்கு சென்று அதே ஊசியை உடலில் செலுத்திக் கொண்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

(The above story first appeared on LatestLY on Jul 04, 2024 05:53 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).