Lorry Driver Hacked To Death: லாரி உரிமையாளர் வெட்டி கொலை.. பல்லாவரம் பகுதியில் பரபரப்பு..!

பல்லாவரம் பகுதியில் லாரி உரிமையாளர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Lorry Driver Hacked To Death: லாரி உரிமையாளர் வெட்டி கொலை.. பல்லாவரம் பகுதியில் பரபரப்பு..!
Lorry Driver Hacked To Death (Photo Credit: @backiya28 X)

மே 28, பல்லாவரம் (Pallavaram News): செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டத்தின் குரோம்பேட்டை டி.எஸ்.லட்சுமணன் நகரை சேர்ந்தவர் தாமஸ். இவர் சொந்தமாக லாரி வைத்து தோல் கழிவுகளை ஏற்றி செல்லும் தொழில் செய்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த சபரி என்பவருக்கு 30 ஆயிரம் கடனாக கொடுத்துள்ளார். பணத்தை திரும்ப கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. Electrical Safety Tips: மழைக்காலம் ஆரம்பமாயிருச்சு.. மின் ஷாக்கில் இருந்து தப்பிக்க சில டிப்ஸ்..!

இதில் ஆத்திரமடைந்த சபரி நேற்று இரவு திருநீர்மலை சாலையில் கருமாரியம்மன் கோயில் அருகே தாமசை வரவழைத்து அரிவாளால் வெட்டி கொலை செய்தார். இதையடுத்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இத்தகவலறிந்த காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் பல்லாவரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

(The above story first appeared on LatestLY on May 28, 2024 04:51 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).