Theni Couple Died: மாட்டு கொட்டகைக்குள் சென்ற கணவன் - மனைவி அடுத்தடுத்து மரணம்.. உறவினருக்கு நேர்ந்த சோகம்.. எமனாய் மாறிய பகீர் பின்னணி.!
மின் வயர் அறுந்து கிடந்தது தெரியாமல் தேங்கியிருந்த நீரில் கால்களை வைத்த தம்பதி பரிதாபமாக பலியாகினர். மாட்டுக்கொட்டகைக்கு சென்ற கணவரை தேடி வந்த மனைவியும் மின்தாக்குதலில் பலியான சோகம் நடந்துள்ளது.
செப்டம்பர் 04, பெரியகுளம் (Theni News): தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் (Periyakulam, Theni), பங்களாப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அரவிந்த். இவரின் மனைவி ஹேமாவதி. அரவிந்த் தனது வீட்டருகே உள்ளே தோட்டத்தில், கொட்டகை அமைத்து மாடு, ஆடு ஆகியவற்றை வளர்த்து வந்துள்ளார்.
நேற்று இரவு நேரத்தில் கொட்டகைக்கு சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஹேமாவதி, தனது உறவினர் செந்தில் குமார் என்பவரை அழைத்துக்கொண்டு தோட்டத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு செந்தில் குமார் தோட்டப்பகுதியில் அரவிந்தை தேடிய நிலையில், கோட்டைக்குள் சென்ற ஹேமாவதியின் குரலும் சில நிமிடங்களுக்கு பின் கேட்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த செந்தில் குமார், உறவினர்களுக்கு செந்தில் குமார் தகவல் தெரிவித்து இருக்கிறார். Plane Crash: திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சோகம்; தம்பதியின் கண்முன் விழுந்து நொறுங்கிய விமானம்.!
பின் கொட்டகைக்குள் செந்தில் குமார் சென்றுள்ளார். இதற்குள் தகவல் அறிந்து வந்த உறவினர்கள் பார்த்தபோது, செந்தில்குமார் மின் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பது உறுதியானது.
அவரை மரக்கட்டை கொண்டு காயத்துடன் மீட்ட நிலையில், மின்தாக்குதலுக்கு உள்ளாகி தூக்கி வீசப்பட்ட தம்பதிகள் அரவிந்த் - ஹேமாவதி ஆகியோரின் உடல், உயிர் பிரிந்த நிலையில் தேங்கியிருந்த நீரில் இருந்து மீட்கப்பட்டது.
முதற்கட்ட விசாரணையில் மாட்டுக்கொட்டகையின் மின் வயர் அறுந்து கிடந்ததே மரணத்திற்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அக்கிராமத்தினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தகவல் அறிந்து வந்த பெரியகுளம் காவல் துறையினர், தம்பதிகளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு, இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
(The above story first appeared on LatestLY on Sep 04, 2023 10:05 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

