Church Father Cheating: மனஅமைதியை தேடிவந்த பெண்ணை சீரழித்து, பணம் பறித்த பாதிரியார்; தனியார் பள்ளி ஆசிரியைக்கு நடந்த கொடுமை.!
இளம்பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் ரீதியாக உபயோகப்படுத்தி பலாத்காரம் செய்த மதபோதகர், ரூ.5 இலட்சம் பணத்தையும் ஏமாற்றி பெண்ணின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிய சோகம் தூத்துக்குடியை அதிரவைத்துள்ளது.
அக்டோபர் 15, தூத்துக்குடி (Thoothukudi News): சென்னையில் உள்ள வேளச்சேரி (Velachery, Chennai) கன்னிகாபுரம் பகுதியில் வசித்து வரும் 32 வயது பெண்மணி, தனியார் பள்ளியில் (Private School Teacher) ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2013 ஆம் ஆண்டு இவருக்கு திருமணம் நடந்து முடிந்தது.
ஆசிரியைக்கு கணவர், பெண் குழந்தை இருக்கின்றனர். இதற்கிடையில், கணவருடன் (Couple Separated) ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் தனித்தனியாக வசித்து வரும் நிலையில், மனரீதியாக பாதிக்கப்பட்ட ஆசிரியை மனஉளைச்சலில் தவித்து வந்துள்ளார்.
தூத்துக்குடி (Thoothukudi) மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட ஆசிரியை, அம்மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை மங்களகிரி விலக்கு பகுதியில் இருக்கும் தியான இல்லத்திற்கு வந்துள்ளார். அப்போது, மதபோதகரமான மைக் மகிலன் என்பவரிடம், தனது மன வருத்தம் குறித்து முறையிட்டிருக்கிறார். Rohit Sharma about Victory: பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றிக்கு காரணம் என்ன? - மனம்திறந்த ரோஹித்; அசத்தல் பதில்.!
அவர் தனக்கு தெரிந்த மற்றொரு போதகரிடம் இளம்பெண்ணை அறிமுகம் செய்து வைத்த நிலையில், அந்த போதகரோ இளம்பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் ரீதியாக உபயோகப்படுத்தி பலாத்காரம் செய்துள்ளார். அது மட்டுமல்லாது, தான் தொழில் செய்ய வேண்டும் என்று இலட்சக்கணக்கில் பணமும் பறித்துள்ளார்.
ரூ.5 இலட்சம் பணமும் கொடுத்து, தன்னை திருமணம் செய்கிறேன் என்ற வாக்குறுதியை நம்பி தன்னையும் கொடுத்த ஆசிரியை, திருமணத்திற்கு வற்புறுத்திய போது, அதற்கு போதகர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விஷயம் குறித்து மகிலனிடம் முறையிட்டபோது, அவரும் தகராறு செய்ததாக தெரிய வருகிறது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண்மணி கடந்த 11 ஆம் தேதி நேரடியாக தேவாலயத்திற்கு சென்று கேட்டபோது, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்மணி சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் வின்சென்ட் அரசி குற்றவாளிகளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்ட பிரச்சனையை, சம்பந்தப்பட்ட கணவருடன் பேசி தீர்க்காமல், மனஅமைதியை தேடிச் சென்ற பெண்ணுக்கு மனதை தேற்றிய பாதிரியாரே இறுதியில் பெண்ணை அடைய எண்ணி நடத்திய வார்த்தை மாயாஜாலங்கள் குறித்து கவனமாக இருக்க வேண்டியதன் அவசியம் குறித்து விளக்குகிறது மேலுள்ள செய்தித்தொகுப்பு.
(The above story first appeared on LatestLY on Oct 15, 2023 08:48 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

