Accident (File Pic)

ஜனவரி 01, ஆம்பூர் (Tirupattur): திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் பகுதியைச் சார்ந்தவர் பரந்தாமன். இவருக்கு மனைவி மற்றும் மூன்று பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில், இன்று புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு, பரந்தாமன் தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் கோவிலுக்கு சென்றதாக தெரிய வருகிறது.

பெற்றோர் கண்முன் துயரம்: அப்போது, இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்ட நிலையில், பெற்றோர் கண் முன்னே இரண்டு குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பரந்தாமன் மற்றும் அவரது அவரது மனைவி, ஒரு பெண் குழந்தை ஆகியோர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடியுள்ளனர். David Warner Retirement: 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் போட்டிகளில் இருந்து விலகினார் டேவிட் வார்னர்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு.! 

மருத்துவமனையில் அனுமதி: இவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேற்படி விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.