ஆகஸ்ட் 13, விழுப்புரம் (Villupuram News): விழுப்புரம் மாவட்டத்தின் நகர பகுதியில் உள்ள திரு.வி.க நகரில் சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வரும் நிலையில், மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பும் நடைபெறுவது வழக்கம். இப்பள்ளியில் விழுப்புரம் மேலத்தெரு பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் 11ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார்.
சிறப்பு வகுப்பில் கலந்து கொண்டபோது மயங்கி விழுந்த 11ஆம் வகுப்பு மாணவன் :
இந்த நிலையில் மாணவர் மோகன்ராஜ் வழக்கம்போல இன்று சிறப்பு வகுப்பில் கலந்து கொள்வதற்காக காலை 7 மணியளவில் பள்ளி வளாகத்திற்கு சென்று வகுப்பறையில் அமர்ந்துள்ளார். அப்போது சில நிமிடங்களிலேயே மாணவர் மயங்கி விழுந்துள்ளார். இதனை கண்ட பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் ஆசிரியர்கள் உடனடியாக மோகன்ராஜை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். Shocking Video: உடலெல்லாம் காயங்கள்.. 15 மாத குழந்தையை கிள்ளி, சுவற்றில் முட்டி தாக்கிய பெண்ணின் பதறவைக்கும் வீடியோ.!
சிறப்பு வகுப்பில் கலந்துகொண்ட மாணவன் மரணம் :
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவர் முன்னதாகவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த விழுப்புரம் தாலுகா காவல்துறையினர் மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் மாணவரின் மர்ம மரணம் தொடர்பாக விசாரணையும் மேற்கொண்டுள்ளனர்.
பள்ளிக்கு விடுமுறை :
பள்ளி மாணவரின் உயிரிழப்பால் பள்ளிக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறை விசாரணை நடைபெறுவதால் பாதுகாப்பு கருதி பள்ளி வளாகத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. முதற்கட்டமாக சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆராய்ந்தனர். பப்ஸ் பிரியர்களே உஷார்.. பப்ஸ்க்குள் பாம்பை பொரித்து அனுப்பிய பேக்கரி.. அதிர்ச்சி வீடியோ.!
சிசிடிவியில் பதிவான காட்சிகள் :
அப்போது மாணவர் வகுப்பறைக்கு வந்து இருக்கையில் அமர்ந்த போது திடீரென பதற்ற சூழ்நிலையை எதிர்கொண்டு சரிந்து விழுந்தது தெரியவந்தது. இதன் பின்னர் மாணவர்கள் மயங்கிய மாணவரை எழுப்ப முயற்சித்த நிலையில், ஆசிரியர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். மேற்படி விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறப்பு வகுப்பில் கலந்துகொண்ட மாணவன் உயிரிழந்த கண்கலங்க வைக்கும் வீடியோ (Villupuram School Student Death Video):
View this post on Instagram