Women Teacher Abuse Minor Student: 16 வயது சிறுவனுடன் முறையற்ற உறவு.. 40 வயது கணித ஆசிரியை போக்ஸோவில் கைது; திருச்சியில் பகீர்.!
40 வயதில் தனது ஆசையை 16 வயது சிறுவன் கொண்டு பூர்த்தி செய்த கணித ஆசிரியை இறுதியில் கம்பிவைத்த சிறைக்குள் அடைக்கப்பட்டார். தான் ஆசைப்பட்ட வாழ்க்கையை அடைய மற்றொரு திருமணம் செய்யாமல் சிறுவனின் வாழ்க்கையில் விளையாடிய பகீர் சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்திதித்தொகுப்பு.
மே 05, துறையூர் (Trichy News): திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் (Thuraiyur, Trichy), வலையம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் தேவி (வயது 40). இவர் துறையூரில் செயல்பட்டு வரும் அரசு உதவிபெறும் பள்ளியில் கணித ஆசிரியையாக (Mathematics Teacher) பணியாற்றி வந்துள்ளார்.
இவருக்கு திருமணம் முடிந்து குழந்தைகள் இருக்கும் நிலையில், சித்திரப்பட்டி கிராமத்தில் டியூசன் வகுப்புகளும் எடுத்து வந்துள்ளார். ஆசிரியை தேவியிடம் அவர் பணியாற்றி வரும் பள்ளியில் பயிலும் 16 வயது மாணவரும் டியூசன் வகுப்புக்கு சென்று வந்துள்ளார்.
இந்நிலையில், மாணவனுக்கு கணக்கு பாடம் சொல்லி தருவதாக கூறிய தேவி, சிறுவனை காதல் வலையில் வீழ்த்த முயற்சித்துள்ளார். சிறுவனுக்கு ஆசிரியையின் எண்ணம் சரிவர புரியவில்லை. Sara Ali Khan: அட்டகாசமான கிளிக்ஸ்.. பார்க்கப்பார்க்க பரவசமாகும் ரசிகர்கள்.. சாரா அலி கானின் இன்ஸ்டா போட்டோ வைரல்…!
இதனால் ஒருகட்டத்தில் தனது ஆசையை அடைய ஆசிரியை எல்லை மீறியதாகவும் தெரியவருகிறது. சிறுவனை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த ஆசிரியை தேவி, அவ்வப்போது அவருடன் வெளியே சென்று வருவதும் வாடிக்கை என்று கூறப்படுகிறது.
இந்த தகவல் அரசல் புரசலாக சிறுவனின் பெற்றோர் காதுகளுக்கு எட்ட, சிறுவனிடம் விசாரணை செய்த பெற்றோர் அங்குள்ள முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சிறுவனிடம் ஆசிரியை அத்துமீறியது உறுதியாகவே, அவரின் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்த காவல் துறையினர் ஆசிரியை தேவியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
(The above story first appeared on LatestLY on May 05, 2023 08:17 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

