Trichy Girl Murder: வனப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட காதல் திருமணம் செய்த இளம்பெண் உடல்; கொலையாளிகள் யார்?.. திருச்சியில் பேரதிர்ச்சி.!

கடந்த ஆண்டு காதல் திருமணம் செய்த பிரியங்காவை யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்ற விபரம் விசாரிக்கப்ட்டு வருகிறது. தா. பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்துகின்றனர்.

Trichy Girl Murder: வனப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட காதல் திருமணம் செய்த இளம்பெண் உடல்; கொலையாளிகள் யார்?.. திருச்சியில் பேரதிர்ச்சி.!
பிரியங்கா (வயது 22) | குற்றம் மாதிரி படம் (Photo Credit: Twitter / Pixabay)

ஆகஸ்ட் 23, முசிறி (Trichy News): திருச்சி மாவட்டத்தில் உள்ள தேவரப்பம்பட்டி, துறையூர் - நாமக்கல் (Thuraiyur Namakkal Road) சாலையில் இருக்கும் வனப்பகுதியில், முட்புதரில் இளம்பெண்ணின் சடலம் (Young Women Body Recovered) கிடந்துள்ளது. இதனைக்கண்ட உள்ளூர் மக்கள் ஜெம்புநாதபுரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, தகவலை அறிந்த முசிறி (Musiri, Trichy) துணை காவல் கண்காணிப்பாளர் யாஸ்மின், தா. பேட்டை காவல் ஆய்வாளர் பொன்ராஜ், காவல் உதவி ஆய்வாளர்கள் வீரமணிகண்டன், செல்வராஜ் தலைமையிலான காவல் துறையினர் நிகழ்விடத்திற்கு விரைந்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரும் நிகழ்விடத்திற்கு வந்தார்.

அதிகாரிகள் மேற்கொண்ட முதற்கட்ட ஆய்வில் பெண்ணின் வாய், கழுத்து பகுதியில் துப்பட்டாவால் கட்டப்பட்டு இருந்தது. காயமும் இருந்தன. இதனால் அவர் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகித்தனர். பெண்ணின் உடலருகே பெண்ணின் உடைகள், உதட்டுச்சாயம், சீப்பு, ஆதார் கார்டு, வங்கிக்கணக்கு புத்தகம் உட்பட ஆவணங்கள் இருந்துள்ளன. Joe Biden on India: “உலகிலேயே அமெரிக்காவுக்கு முக்கியமான நாடு இந்தியா” – இந்தியாவுக்கான அமெரிக்கா தூதரிடம் உரையாடிய ஜோ பைடன்.!

Crime (Photo Credit: Pixabay)

இவற்றை கைப்பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, சடலமாக மீட்கப்பட்ட பெண் தா.பேட்டை ஊரக்கரை கிராமத்தை வசித்து வரும் அறிவழகன் என்பவரின் மகள் பிரியங்கா (வயது 22) என்பது உறுதியானது. கடந்த ஆண்டு மலையப்ப நகர் பகுதியை சேர்ந்த சீனுபிரசாத் (வயது 24) என்ற இளைஞரை பிரியங்கா காதலித்துள்ளார்.

இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து, கடந்த ஆண்டு பெற்றோரை எதிர்த்து திருமணமும் செய்துகொண்டனர். ராயவேலூர் பகுதியில் சீனுபிரசாத் கூலிவேலை செய்து வருகிறார். பிரியங்கா தா.பேட்டை பகுதியில் செயல்படும் ஜவுளிக்கடையில் சில மாதமாக வேலைபார்த்து வந்துள்ளார்.

இதற்கிடையில் தான் அவரின் கொலை சம்பவமும் நடந்துள்ளது. பிரியங்காவை யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்ற விபரம் விசாரிக்கப்ட்டு வருகிறது. தா. பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்துகின்றனர். காதல் திருமணம் செய்த பெண்ணின் உடல், கொலை செய்யப்பட்டவாறு வனப்பகுதியில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

(The above story first appeared on LatestLY on Aug 23, 2023 12:09 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).