Arasu Bus Diwali 2024 Special Service (Photo Credit @arasubus / @sivasankar1ss X)

நவம்பர் 04, சென்னை (Chennai News): 2024 தீபாவளி (Diwali) பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட சென்னை, கோவை போன்ற வெளியூர்களில் இருந்து பணியாற்றி வந்தோர், சொந்த ஊர் சென்று நேற்று பணியிடங்களுக்கு திரும்பத் தொடங்கினர். தீபாவளிக்கு முன்னரும், பின்னரும் அவர்கள் சிரமம் இல்லாத பயணத்தை மேற்கொள்ள, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் விரைவு மற்றும் சிறப்புப் பேருந்து சேவைகள் ஏற்பாடு செய்து வழங்கப்பட்டன. அந்த வகையில், பல இலட்சக்கணக்கானோர் அரசுப் பேருந்துகளில் (TN Govt Bus) சொந்த ஊர் பயணம் செய்திருந்தனர். Shawarma: சவர்மாவில் ஒரே துர்நாற்றம்; குழந்தைகளுக்கு வாங்கிக்கொடுத்து ஷாக்கான தந்தை., அலட்சியத்தில் உணவுப் பாதுகாப்புத்துறை? 

அரசுப்போக்குவரத்து கழகத்தில் முதல்முறை:

இந்நிலையில், சொந்த ஊர் சென்றவர்கள் ஞாயிற்றுக்கிழமையான நேற்று காலை முதலாகவே பணியிடங்களுக்கு திரும்பியதால், அரசுப் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. சிறப்பு பேருந்துகள் முன்பதிவு தொடங்கியிருந்த நிலையில், மொத்தமாக சுமார் 79,626 பயணிகள் முன்பதிவு செய்து பயணம் செய்திருந்தனர். முன்பதிவு செய்யாத பயணிகளின் எண்ணிக்கையை சேர்ந்தால், இது சில இலட்சங்கள் எண்ணிக்கையை கடக்கும். இந்த எண்ணிக்கை தமிழக அரசுப் போக்குவரத்துக் (Arasu Bus) கழக வரலாற்றில் முதல் முறை ஆகும்.

அமைச்சர் நேரில் ஆய்வு:

சென்னை வரும் பயணிகளின் வசதிக்காக இயல்பாக சென்னையை நோக்கி வார இறுதி நாட்களில் தேவையான பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், அதனைக்காட்டிலும் 2,561 சிறப்பு பேருந்துகள், 3,912 கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. நேற்று அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கரும் சேலம், பெரம்பலூர் பேருந்து நிலையங்களில், பயணிகளின் வசதிக்கேற்ப பேருந்துகள் சரியாக இயக்கப்படுகிறதா? என்பதை நேரில் ஆய்வு செய்து, அதிகாரிகளுடன் ஆலோசனையும் மேற்கொண்டார். தலைநகரில் இருந்து சொந்த ஊர் சென்றவர்கள், மீண்டும் சென்னை நோக்கி பயணம் செய்ததால் சென்னையே நேற்றும், இன்றும் ஸ்தம்பித்துபோகும் அளவு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அமைச்சர் சிவசங்கர் நேரில் ஆய்வு செய்த காட்சி:

அரசுப் போக்குவரத்து கழகத்தின் சாதனை அறிவிப்பு: