
மார்ச் 23, நூஹ் (Technology News): ஹரியானா (Haryana) மாநிலத்தில் உள்ள நூஹ் மாவட்டம், பத்ராபூர் கிராமத்தில் வசித்து வருபவர் ஆஷிக். கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதம், கொரோனா பரவல் காரணமாக ஆன்லைன் வகுப்புகள் நடந்து வந்தன. இதனால் மாணவ-மாணவியரின் பெற்றோர்களின் வாட்சப் (WhatsApp) எண்கள் குழுவில் இணைக்கப்பட்டு, அதன் வாயிலாக பாடம் குறித்த தகவல், தேர்வுத்தாள் போன்றவை அனுப்பி வைக்கப்பட்டு இருந்தன. இதனிடையே, ஆஷிக் சம்பவத்தன்று பள்ளியின் ஆசிரியரால் தவறுதலாக குழுவில் இணைக்கப்பட்டார். ஆஷிக்கின் அலைபேசி எண்ணை ஆசிரியர் குழுவில் இணைந்த பின்னர், ஆஷிக் குழுவில் ஆபாசமான புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களை பகிர்ந்து இருக்கிறார். Dinosaur Footprints: 200 மில்லியன் ஆண்டுகள் பழமையான டயனோசரின் காலடித்தடங்கள்; பள்ளி வளாகத்தில் இருந்த பாறையில் கண்டெடுப்பு.!
5 ஆண்டுகள் சிறை தண்டனை உத்தரவு:
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர், உடனடியாக ஆஷிக்கை குழுவில் இருந்து நீக்கினார். மேலும், அவர் பதிவு செய்த வீடியோ போன்றவற்றை நீக்கிவிட்டு, பள்ளி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தார். இதன்பேரில் அதிகாரிகள் போக்ஸோ, தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து ஆஷிக்கை கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை, நூஹ் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதியரசர் நீறு கம்போஜ் தலைமையிலான அமர்வில், இறுதி விசாரணை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிபதி, ரூ.13000 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.