பாகிஸ்தான் விமானப்படை குண்டுவீச்சு தாக்குதல்.. பொதுமக்கள் 30 பேர் உயிரிழப்பு..!

பாகிஸ்தான் விமானப்படை 8 குண்டுகளை வீசியதில், அந்நாட்டின் கைபர் பக்துன்க்வா கிராமத்தை சேர்ந்த 30 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் விமானப்படை குண்டுவீச்சு தாக்குதல்.. பொதுமக்கள் 30 பேர் உயிரிழப்பு..!
Pakistan Air Force Attack (Photo Credit: @NDTVWORLD X)

செப்டம்பர் 22, இஸ்லாமாபாத் (World News): பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா (Khyber Pakhtunkhwa) கிராமத்தில் பாகிஸ்தான் விமானப்படை 8 குண்டுகளை வீசியதில் 30 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் விமானப்படை இன்று காலை நடத்திய வான்வழித் தாக்குதல்களில் பெண்கள், குழந்தைகள் உட்பட 30 பேர் உயிரிழந்தனர். அதிகாலை 2 மணியளவில் பாகிஸ்தான் போர் விமானங்கள் (Pakistan Air Force) திரா பள்ளத்தாக்கில் அமைந்துள்ள மாட்ரே தாரா கிராமத்தில் எட்டு LS-6 குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. ஷாப்பிங் மாலில் துப்பாக்கிச்சூடு; 2 பேர் பலி.. 5 பேர் படுகாயம்..!

வான்வழித் தாக்குதல்:

இதில், பலர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இடிபாடுகளுக்கு அடியில் உடல்களைத் தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. கைபர் பக்துன்க்வாவில் கடந்த காலங்களில் பல பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பயங்கரவாத அமைப்புகளை அழிக்கும் நோக்கில் பாகிஸ்தான் விமானப்படை வான்வழி தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது. சொந்த நாட்டு மக்கள் மீது விமானப்படை தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு சர்வதேச மனித உரிமை அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

வீடியோ இதோ:

(The above story first appeared on LatestLY on Sep 22, 2025 05:27 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).