Earthquake: ஆப்கானிஸ்தான், காஷ்மீர், புதுடெல்லியில் நிலநடுக்கம்.. அச்சத்தில் மக்கள்., வீதிகளில் தஞ்சம்.!

இந்தியா மற்றும் அதன் அண்டை நாடுகளில் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதனால் மக்களிடையே அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.

Earthquake: ஆப்கானிஸ்தான், காஷ்மீர், புதுடெல்லியில் நிலநடுக்கம்.. அச்சத்தில் மக்கள்., வீதிகளில் தஞ்சம்.!
Afghanistan Earthquake (Photo Credit: @LastQuake X)

ஏப்ரல் 19, காபூல் (World News): ஆப்கானிஸ்தான் (Afghanistan Earthqukae) - தஜிகிஸ்தான் எல்லைப்பகுதியில் இன்று காலை 11:47 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் (Earthquake Today) ரிக்டர் அளவுகோலில் 5.9 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. நிலத்துக்கடியில் சுமார் 94 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக நில ஆய்வியல் மையங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலநடுக்கத்தின் தாக்கமானது பாகிஸ்தானின் எல்லைப்புற மாகாணம், இந்தியாவின் ஜம்மு காஷ்மீர், பூஞ்ச், புதுடெல்லி வரை உணரப்பட்டுள்ளது. UPI Transactions GST: ரூ.2,000 யுபிஐ பரிவர்த்தனைக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு? நிதியமைச்சகம் அதிகாரபூர்வ அறிவிப்பு.! 

இந்தியாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது:

ஜம்மு காஷ்மீரில் உள்ள பல பகுதியில் மிதமான அதிர்வு உணரப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் - தஜிகிஸ்தான் எல்லைப்பகுதியை (Afghanistan–Tajikistan Border Region Earthquake) மையமாக வைத்து ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் இந்தியாவிலும் உணரப்பட்டுள்ளதால் மக்கள் அச்ச உணவில் இருக்கின்றனர். பலரும் சில நிமிடங்கள் வீதிகள் தஞ்சம் அடைந்தனர். தற்போதுவரை நிலநடுக்கத்தால் எந்த விதமான பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் இல்லை. அதேநேரத்தில், சமீபத்தில் மிகப்பெரிய நிலநடுக்கத்தை எதிர்கொண்ட மியான்மரில் இன்றும் 2 முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியிலும் நிலநடுக்கம்:

காஷ்மீரில் நிலநடுக்கம் பதிவாகியது:

(The above story first appeared on LatestLY on Apr 19, 2025 01:22 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).