Dawood Ibrahim (Photo Credit: @the_fauxy X)

டிசம்பர் 20, கராச்சி (Karachi): மகாராஷ்டிர தலைநகர் மும்பையை சேர்ந்தவர் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம். இவர் கடந்த 1993 ஆம்ஆண்டு மும்பையில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்டவர். அந்த தொடர் குண்டுவெடிப்பில் 257 பேர் உயிரிழந்தனர். 1,400-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதன் காரணமாக இந்தியாவில் தேடப்படும் தீவிரவாதிகளின் பட்டியலில் தாவூத் சேர்க்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவர் இந்தியாவில் இருந்து தப்பியோடிவிட்டார். இந்நிலையில் அவர் பாகிஸ்தானின் கராச்சி நகரில் தலைமறைவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

தாதா தாவூத் இப்ராஹிமிற்கு விஷம்: இந்நிலையில் தாவூத் இப்ராஹிமிற்கு மர்ம நபர்களால் விஷம் கொடுக்கப்பட்டு, அவர் கராச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இந்த தகவல்கள் அனைத்தும் எக்ஸ், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவி வருகின்றன. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருவதாக கூறப்படுகிறது. Kia Sonet Facelift: கியா சொனெட் காரின் முன்பதிவு தொடக்கம்... முன்பதிவு தொகை எவ்வளவு?.!

இணைய சேவைகளை முடக்கிய பாகிஸ்தான்: இதனால் பாகிஸ்தான் (Pakisthan) அரசு அந்நாட்டின் இணைய சேவையை முடக்கியுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. தாவூத் இப்ராஹிமுக்கு விஷம் வைக்கப்பட்டதாலேயே பாகிஸ்தானில் இணைய சேவை முடக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இருப்பினும் பாகிஸ்தானின் முன்னணி ஊடகங்களில், தாவூத் இப்ராஹிம் தொடர்பாக எவ்வித செய்தியும் வெளியாகவில்லை.