Indian Students Killed In Canada: கனடாவில் நடந்த பயங்கர கார் விபத்து.. 3 இந்திய மாணவர்கள் பலி..!

Indian Students Killed In Canada: கனடாவில் நடந்த பயங்கர கார் விபத்து.. 3 இந்திய மாணவர்கள் பலி..!
Accident File Pic (Photo Credit: PTI)

ஜூலை 30, கனடா (World News): கனடாவில் நடந்த சாலை விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்ததனர். New Brunswick, Mill Cove என்ற இடத்தில் அவர்கள் பயணித்த டாக்ஸியின் டயர் திடீரென வெடித்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்துள்ளது. Flooding in North Korea: வடகொரியாவில் வெள்ளம்.. மீட்புப்பணிகள் தீவிரம்..!

பலியானவர்கள் லூதியானா மாவட்டத்தில் உள்ள மலாடு கிராமத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள், ஹர்மன் சோமல், மற்றும் நவ்ஜோத் சோமல், என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மூன்றாவது பலியானவர் சங்ரூர் மாவட்டத்தில் உள்ள சமனாவைச் சேர்ந்த ரஷ்ம்தீப் கவுர் ஆவார். இதில் 3 மாணவர்களும் வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியாகினர். உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் இருந்த டிரைவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

(The above story first appeared on LatestLY on Jul 30, 2024 05:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).