
மார்ச் 11, கராச்சி (World News): பாகிஸ்தான் நாட்டில் உள்நாட்டு பிரச்சனை மிகப்பெரிய அளவில் கடந்த சில மாதமாக தீவிரமடைந்து வந்தது. பலுசிஸ்தான் என்ற தனிநாடு கேட்டு பலூச் விடுதலை அமைப்பு போராடி வரும் நிலையில், அவர்கள் அரசுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவ்வப்போது இராணுவம் - பலுசிஸ்தான் ஆதரவு கிளர்ச்சிப்படைகள் இடையே பயங்கர மோதலும் நடக்கிறது. இதனிடையே, பெஷாவர் நோக்கி பயணம் செய்த பயணிகள் இரயில் கடத்தப்பட்டுள்ளது. Sunita Williams Return to Earth: 9 மாதங்களுக்குப்பின் பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்.. தேதி குறித்த முழு விவரம் இதோ..!
470 பயணிகள் கடத்தல்?
இந்நிலையில், பலூச் விடுதலை இயக்கத்தினர், 470 பயணிகள் பயணம் செய்த இரயிலை கடத்தி இருக்கின்றனர். அரசுக்கு எதிராக அவர்கள் சில கோரிக்கையையும் முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது. சுமார் 100 பணயக்கைதிகள், 470 பயணிகள் என பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட மக்களின் நிலை தெரியவில்லை. இராணுவ அதிகாரிகள் 6 பேரை சுட்டுக்கொலை செய்து, பயணிகள் இரயில் கடத்தப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் இராணுவ அதிகாரிகள் எனவும் கூறப்படுகிறது. இராணுவ அதிகாரிகளுக்கான சிறப்பு இரயிலை பயங்கரவாதிகள் கடத்தியதாகவும் தெரியவந்துள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி தொடர் முடிந்ததும் சம்பவம்:
சமீபத்தில் தான் பாகிஸ்தானில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டி நடந்தது. போட்டி நடைபெற்ற ராவல்பிண்டி, கராச்சி மைதானங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தியா தனது வீரர்களை பாகிஸ்தானின் உள்நாட்டு பிரச்சனையை புரிந்துகொண்ட அனுப்ப மறுத்து, இந்திய அணி பங்கேற்ற போட்டியை துபாயில் நடத்த வைத்தது. இறுதிப்போட்டியில் இந்தியா நியூசிலாந்தை எதிர்த்து வென்று மகுடம் சூடியது. அந்த கொண்டாட்டம் முடிவதற்குள், பாகிஸ்தானில் நடந்த பகீர் சம்பவம் உலகளவில் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.
இரயில் கடத்தப்பட்டது தொடர்பான காட்சிகள்:
#BreakingNews | Balochistan Militants Open Fire On Pakistan Train In Hostage Crisis, 6 Security Men Killed#Exclusive inputs: @manojkumargupta @siddhantvm shares more details#Pakistan #Balochistan #TrainHijack | @kritsween pic.twitter.com/90pN7sEhtB
— News18 (@CNNnews18) March 11, 2025