Six Sri Lankans Knifed To Death: கனடாவில் கத்திக்குத்து.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 இலங்கையர்கள் பலி..!
கனடாவின் ஒட்டாவா நகரில் இடம்பெற்ற கோர தாக்குதல் சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு இலங்கையர்கள் பலியாகியுள்ளனர்.
மார்ச் 08, கனடா (World News): கனடா (Canada) தலைநகர் ஒட்டாவாவில் (Ottawa) இலங்கையை சேர்ந்த 35 வயதான தர்ஷினி தனது கணவர் மற்றும் 4 குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் இவர்கள் 6 பேர் மீதும் கத்திக்குத்து (stabbed with knives) நடத்தப்பட்டுள்ளது. இதில் தாய் மற்றும் பிள்ளைகள் உயிரிழந்துள்ளதுடன் தந்தை பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Maha Shivratri 2024: சிவ சிவ என்றிட தீவினை யாவும் தீரும்... மகா சிவராத்திரி நல்வாழ்த்துக்கள்..!
தற்போது இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஒட்டாவா காவல் துறையினர் தெரிவித்துள்ளார். அவர் இலங்கையைச் சேர்ந்த 19 வயதான பெப்ரியோ டி சொய்சா ஆவார். கனடாவின் அல்கோனிகின் கல்லூரியின் மாணவரே இந்த படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் எனவும் இறுதியாக கடந்த 2023ம் ஆண்டில் இவர் கல்லூரிக்கு சென்றிருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. என்ன நோக்கத்திற்காக இந்த படுகொலைகள் மேற்கொள்ளப்பட்டன என்பது பற்றிய விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)