Nepal Protest (Photo Credit: @voicetvurdu1 X)

செப்டம்பர் 10, காத்மண்டு (World News): நேபாள நாட்டின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் சமீபத்தில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உட்பட 26 சமூக ஊடகங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இந்த தடையை நீக்க கோரி இளைஞர்கள் தலைநகர் காத்மண்டுவில் திரண்டு போராட்டத்தை முன்னெடுத்தனர். இந்த போராட்டத்தின் போது நேபாள பிரதமர் ஷர்மா ஒலி பதவி விலக வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர். அரசின் மீதான ஊழல் குற்றசாட்டுகளை அம்பலப்படுத்தியதால் சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், அதிபர், பிரதமர் பதவி விலக வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

போராட்டம்:

இதனிடையே, நாட்டின் ஆளுங்கட்சிக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது காவல்துறையினர் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த ஒரு கட்டத்தில் துப்பாக்கி சூடு நிகழ்வை கையில் எடுத்தனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் மக்கள் போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில், இருதரப்பு மோதல் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து போராட்டம் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு பல பகுதிகளில் உள்ள இளைஞர்களும், அரசுக்கு எதிராக கருத்துக் கொண்ட நபர்களும் போராட்டத்தில் இணைந்து வன்முறையை தீவிரப்படுத்தினர். Nepalese Gen Z Protests & KP Sharma Oli Resign: ஜென் இசட் போராட்டம்: நேபாள பிரதமர் சர்மா ஒலி பதவி விலகல்.! 

வன்முறையில் நேபாளம்:

அந்நாட்டின் உள்துறை அமைச்சர் முதற்கட்டமாக தற்போது வரை ஏற்பட்ட உயிர் பலிகளுக்கு பொறுப்பேற்று, தான் பதவி விலங்குவதாகவும், அரசு இந்த பலிக்கு பொறுப்பேற்றுக் கொள்வதாகவும் தெரிவித்திருந்தார். மேலும், இதுவரை பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு விதித்திருந்த தடையை நீக்குவதாகவும் தெரிவித்தார். ஆனால், இருபது பேரில் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம் தொடர்ந்து நிலையில், இரண்டாவது நாளில் போராட்டம் வன்முறையாக மாறியதால் அங்குள்ள அரசு அலுவலகங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. நேபாளத்தின் பாராளுமன்றம், அரசு அதிகாரிகளின் வீடுகள் சுற்றி வளைக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன.

ஷர்மா ஒலி பதவி விலகல்:

ஒரு கட்டத்தில் நேபாள நாட்டின் பிரதமர் ஷர்மா ஒலி துபாய் நாட்டுக்கு தப்பிச் செல்ல இருப்பதாகவும் தகவல் வெளியான நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். தற்போது அங்கு ராணுவ ஆட்சி அமலில் இருப்பதாகவும், ராணுவம் அதிகாரத்தை கையில் எடுத்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு அருகிலும் போராட்டம் தொடர்ந்ததால், விமான சேவைகளும் அடுத்தடுத்து ரத்து செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டன. சர்மா ஒலி தலைமையிலான அரசாட்சியில் பல அரசு துறை அதிகாரிகளும், அமைச்சர்களும் ஊழல்கள் செய்துள்ளதாகவும், இது தொடர்பான விவாதங்கள் அதிகம் நடைபெற்று வந்ததால் அதனை கட்டுப்படுத்தும் பொருட்டு அரசு சமூகத்தில் தடை விதித்ததாகவும் சொல்லப்படுகிறது.

முன்னாள் பிரதமரின் மனைவி எரித்துக்கொலை:

இந்நிலையில், நேபாள நாட்டின் முன்னாள் பிரதமர் ஜலானாத் கனலின் மனைவி போராட்டக்காரர்களால் உயிருடன் நிறுத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்த போது உள்ளே சிக்கிக் கொண்டவர் பரிதாபமாக உயிரிழந்தார். பதற்றம் தொடருவதால் அங்குள்ள இந்தியர்கள் கவனமாக இருக்குமாறு இந்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது.

முன்னாள் பிரதமர் தாக்கப்படுவதாக வைரலாகும் காட்சிகள்: