Minor Girl Killed: பணிப்பெண்ணான 12 வயது சிறுமியை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற பயங்கரம்; பணத்திமிரில் பதறவைக்கும் சம்பவம்.!
வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண்ணை கொடுமைப்படுத்தும் நபர்கள் செய்யும் பதறவைக்கும் செயல்கள் நெஞ்சை பதறவைக்கின்றன.
மார்ச் 03, லாகூர் (World News): பாகிஸ்தான் நாட்டில் உள்ள லாகூர் மாகாணம், சர்கோதா தெற்கு பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி, அப்பகுதியில் தொழிலதிபராக வலம்வரும் தம்பதியின் வீட்டில் பணிப்பெண்ணாக வேலைபார்த்து வந்துள்ளார்.
உணவு கொடுக்காமல் சித்தரவதை: தொழிலதிபர் தம்பதியான ஜாவத் பாட்டி (Jawad Bhatti) மற்றும் அவரின் கணவர் சேர்ந்து, 12 வயது சிறுமியை ஈவு இரக்கமின்றி கடுமையாக தாக்கி, உணவு கொடுக்காமல் சித்ரவதை செய்துள்ளனர்.
சிறுமி பலி: சம்பவத்தன்று சிறுமியை தம்பதி இரும்பு கம்பியால் தாக்கி சித்ரவதை செய்ய, ஒருகட்டத்தில் துடிதுடித்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமி திடீர் மரணம் அடைந்துவிட்டதாக அவரின் குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. Lemon Ginger Drink: உடல் எடையை குறைக்க நினைக்கிறீங்களா?.. கொழுப்புகளை கரைத்து வெளியேற்றும் இஞ்சி-எலுமிச்சை நீர்.!
தம்பதிக்கு வலைவீச்சு: நிகழ்விடத்திற்கு விரைந்தவர்கள் சிறுமி கொலை செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தலைமறைவான தம்பதியை தேடி வருகின்றனர்.
விசாரணைக்கு உத்தரவு: தொழிலதிபராக வளரும் வரும் நபர், சுங்கச்சாவடி ஒப்பந்ததாரரும் ஆவார். இந்த விசயத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள மகனா முதல்வர், காவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டு இருக்கிறார். இதனால் விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
(The above story first appeared on LatestLY on Mar 03, 2024 11:54 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

